பக்கம் எண் :

236சமுதாய வீதி

     ‘‘இந்த வாத்தியார் ஒண்ணும் ஆகாசத்திலேருந்து உனக்கு முன்னாலே
திடீர்னு அபூர்வமாக வந்து குதிச்சுப்புடலே, என்னாலேதான் உனக்கும்
பழக்கம்...’’

     ‘‘இருக்கட்டுமே, அதுக்காக...’’

     ‘‘நீ ரொம்ப எதிர்த்துப் பேசறே? உனக்கு வாய்க் கொழுப்பு
அதிகமாயிடிச்சு.’’

     ‘‘........’’

     ‘‘வந்த இடத்திலே உன்கிட்ட ஒண்ணும் பண்ண முடியலை. மெட்ராஸா
இருந்தா ‘தூரப்போடி கழுதைன்னு’ தள்ளிப்புட்டு ஒரே நாளிலே வேறே
ஹீரோயினுக்கு வசனம் மனப்பாடம் பண்ணி வச்சு உன்னை வெளியே
அனுப்பிடுவேன்.’’

     ‘‘அப்பிடிச் செய்ய வேண்டிய அவசியம் இருந்தா அதையும் செய்துக்க
வேண்டியதுதானே?’’

     இதைக் கேட்டுக் கோபால் அதிர்ச்சியடைந்தான். இவ்வளவு துடுக்காக
அவள் தன்னிடம் எதிர்த்துப் பேச நேர்ந்த அனுபவம் இதற்கு முன் அவனுக்கு
ஏற்பட்டதே இல்லை. முத்துக்குமரன் என்ற கொழுகொம்பின் பற்றுதலில் மாதவி
என்ற மெல்லிய கொடி எவ்வளவு இறுக்கமாகப் பற்றிப் படர்ந்திருந்தால் இந்தத்
துணிவு அவளுக்கு வந்திருக்க முடியுமென்று எண்ணியபோது அவன்
திகைத்தான். கடைசியில் அப்துல்லாவும், அவனும் உதயரேகாவும்தான்
விமானத்தில் சென்றார்கள். மாதவி, முத்துக்குமரனோடும் மற்றக்
குழுவினருடனும் காரில் தான் ஈப்போவுக்கு வந்தாள்.

     மாதவிக்கு உறைக்க வேண்டுமென்பதற்காகத்தான் அவளுக்கு ரிஸர்வ்
செய்திருந்த விமானப் பயணச் சீட்டை உதயரோகாவின் பெயருக்கு மாற்றி
அவளை விமானத்தில் அழைத்துக்கொண்டு போனார்கள் அவர்கள். மாதவியோ
அவர்கள் யாரை விமானத்தில் அழைத்துப்