பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி243

களுக்கு அளித்தது. சாலைகள் எல்லாம் பளீரென்றும் கச்சிதமாகவும் இருந்தன.
மெட்ராஸில் பார்த்திராத தினுசுகளில் சிறிதும் பெரிதுமாகப் புதிய புதிய
கார்கள் நிறையத் தென்பட்டன. மலாய்க்காரர்கள் யார், சீனர்கள் யார் என்று
வித்தியாசம் கண்டுபிடிப்பது ஆரம்பத்தில் கடினமாக இருந்தது.

     அவர்கள் அங்கே போய்ச் சேர்ந்த தினத்தன்று மறுநாள் காலையில்
உள்ளூர்க் காலைத் தமிழ்த் தினசரியில் நடிகர் கோபாலைப் பேட்டி கண்டு
வெளியிட்டிருந்தார்கள். அந்தப் பேட்டியில், ‘‘இங்கே நீங்கள் நடத்த இருக்கும்,
‘கழைக் கூத்தியின் காதல்’ என்ற நாடகத்திற்கு முன் அதை உருவாக்கும்
முயற்சியில் ஈடுபட நேர்ந்தது பற்றி மலேயாத் தமிழர்களுக்கு எதுவும்
கூறுவீர்களா?’‘ என்று ஒரு கேள்வி இருந்தது.

     ‘‘முழுக்கமுழுக்க நானே திட்டமிட்டு மலேயாத் தமிழர்களுக்காகத்
தயாரித்த நாடகம் இது! இதன் வெற்றியை நான் என் வெற்றியாகவே
கருதுவேன்’ - என்று அந்தக் கேள்விக்கு மறுமொழி கூறியிருந்தான் கோபால்.
அதைப் படித்தபோது மாதவிக்கும் முத்துக்குமரனுக்கும் தாங்க முடியாத
ஆத்திரம் வந்தது.

     ‘‘உபசாரத்துக்குக்கூட இது நீங்க எழுதின நாடகம்னு ஒரு வார்த்தை
சொல்லலை,, பார்த்திங்களா? அவருக்கு எத்தினி திமிரு இருந்தா இப்படிப்
பதில் சொல்லியிருப்பார்’’ -

     ‘‘நீ சொல்றது தப்பு மாதவீ! அவனுக்குத் திமிரும் கிடையாது, ஒரு
எழவும் கிடையாது. சுபாவத்திலே அவன் பெரிய கோழை, வெளியிலே
பெரிய தீரன் மாதிரி நடிக்கிறான். இந்தப் பேட்டி விஷயம் வேறே மாதிரி
நடந்திருக்கும், பத்திரிக்கைகாரங்களை அப்துல்லாதான் ‘மரீலீ’னுக்குக்
கூட்டிக்கிட்டு வந்திருப்பார். பேட்டி எடுக்கறப்ப அவரும்கூட
இருந்திருக்கார்னு இந்தப் பேட்