பக்கம் எண் :

244சமுதாய வீதி

டியிலேயே போட்டிருக்கே படம், அதுலேருந்து தெரியுது. இதோ பாரு
படத்தை. முதல்லே கோபால், நடுவிலே உதயரேகா. அப்புறம் அப்துல்லான்னு
மூணு பேருமா நிக்கறாங்களே, அப்துல்லாவுக்குப் பயந்து அவன் உன்
பெயரையோ என் பெயரையோ சொல்லாமல் விட்டிருப்பான். அவன் உன்
பேரையும், என் பேரையும் சொல்லி அப்துல்லா அதை
வேண்டாம்னுருக்கணும்.’’

     ‘இருந்தாலும் இருக்கும்! ஆனா இது அடுக்கவே அடுக்காது. நாடகத்தை
எழுதி முழுக்க முழுக்க ‘டைரக்ட்’ பண்ணின உங்களை அவர் மறந்து போன
பாவம் அவரைச் சும்மா விடாது.’’

     ‘‘பாவ புண்ணியத்தைப் பார்க்கிறவங்க இன்னிக்கி உலகத்திலே யார்
இருக்காங்க?’’ என்ற அவளுக்கு விரக்தியான குரலில் மறுமொழி கூறினான்
முத்துக்குமரன்.

     அவர்கள் தங்கியிருந்த ‘ஸ்டிரெயிட்ஸ் ஹோட்ட’லில் சைனீஸ் உணவும்
காண்டினெண்டல் உணவு வகைகளும்தான் இருந்தன. எனவே காலைச்
சிற்றுண்டியும் பகலுணவும், இரவு உணவும் அம்பாங் ஸ்டிரீட்டிலிருந்து ஒரு
இந்திய ஹோட்டல்காரர் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார். காபி,
கூல்டிரிங்ஸ், ஐஸ்கிரீம் போன்றவைகளை மட்டும் அவர்கள் தங்கள்
ஹோட்டலிலேயே ஏற்பாடு செய்துகொண்டார்கள்.

     வந்த தினத்தன்று இரவு எங்கும் போகவில்லையாயினும் மறுநாள் காலை
அவர்கள் மகாமாரியம்மன் கோவிலுக்கும், பத்து மலைக்கும் போய்விட்டு
வந்தார்கள். அவர்கள் பத்து மலைக்குப் போயிருந்தபோது நீண்ட
நாட்களுக்குமுன் மதுரையில் ரொட்டிக் கடை வைத்திருந்த
ருத்ரபதிரெட்டியாரைத் தற்செயலாக அங்கே சந்திக்க நேர்ந்தது. அவரும்
உடனே அவனை அடையாளம் கண்டு கொண்டார். பெட்டாலிங் ஜெயாவில்
ரொட்டிக்கடை வைத்திருப்பதாகவும், இரண்டு வருஷத்