பக்கம் எண் :

248சமுதாய வீதி

கித்தானா அல்லது ஏதாவது உள்ளர்த்தத்தோடு உபயோகித்தானா என்பதைப்
புரிந்துகொள்ள முடியாமல் உள்ளேயே புழுங்கினாள் அவள். இந்நிலையில்
உதயரேகாவின் நடத்தையைப்பற்றி மேலே பேச்சை வளர்ப்பது இருவரும்
சுமுகமாகப் பேசிக் கொண்டிருக்கும் அமைதியான சூழ்நிலையைக் கெடுப்பதாக
முடியும் என்று எண்ணிப் பயத்தோடு அந்தப் பேச்சை நிறத்தினாள் அவள்.

                      ஃ         ஃ        ஃ


     கோலாலும்பூரில் முதல் நாள் நாடகம் நல்ல வசூலைத் தந்தது.
தொடர்ந்து ஒவ்வொரு நாளுக்கும் ஹெவி ‘புக்கிங்’ இருப்பதாக அப்துல்லா
கூறிக்கொண்டிருந்தார். வந்த இரண்டாவது நாள் மத்தியானம் ருத்ரபதி
ரெட்டியாரின் கார் ஸ்டிரெயிட்ஸ் ஹோட்டலுக்கு வந்து அவர்களை விருந்துக்கு
அழைத்துக்கொண்டு போயிற்று. ருத்ரபதி ரெட்டியார் குடியிருந்த
பெட்டாலிங்ஜெயா பகுதி புதிய புதிய நவீனக் கட்டிடங்களைக் கொண்டிருந்தது.
கோலாலும்பூரில் புதிய அழகிய எக்ஸ்டென்ஷன் என்று அதைப் பற்றி ருத்ரபதி
ரெட்டியாரின் டிரைவர் விவரித்துக் கூறினான். ருத்ரபதி ரெட்டியார்
மலேயாவுக்கு வந்து பெரும் பணக்காரராகியிருப்பதாகத் தெரிந்தது. முதல்
தரமான பாண்டிய நாட்டுச் சைவச் சமையல் விருந்தில் கிடைத்தது.

     விருந்து முடிந்ததும் மாதவிக்கு ஒரு மெல்லிய தங்கச் சங்கிலியையும்,
முத்துக்குரனுக்கு ஓர் உயர்தரமான ஸீகோ கைக்கடிகாரத்தையும் அன்பளிப்பாக
வழங்கினார் ரெட்டியார். அவர் மாதவியிடம் தங்கச் சங்கிலியை வெற்றிலை
பாக்குப் பழத்தோடு வைத்துக்கொடுக்க முன் வந்தபோது அதை வாங்கிக்
கொள்ளலாமா கூடாதா என்பது பற்றி முத்துக்குமரன் என்ன நினைக்கிறான்
என்று அறிய விரும்பியவள்போல தயக்கத்தோடு அவன் முகத்தை ஏறிட்டுப்
பார்த்தாள் அவள். முத்துக்குமரன் அவள் பயத்தை கண்டு சிரித்தான்.