பக்கம் எண் :

250சமுதாய வீதி

     ‘‘அப்படியிலேலேம்மா! ஒரு தபா பாரு; என் வியாபார சம்பந்தமா
ஹாங்காங் போறதுக்காக - பிளேன் டிக்கட் வாங்கறதுக்காக மரீலினுக்குப்
போயிருந்தேன். பி. ஓ. ஏ. ஸி. பிளேன் கம்பெனிக்காரன் ஆபீஸ் அந்த
மரீலின் ஒட்டல்லேதான் கிரவுண்ட்ப்ஃளோர்ல இருக்கு. அங்கே ரிஸப்ஷன்ல
ஒரு சீனச்சி - சின்ன வயசுக் குட்டி இருந்தா! அவ கீச்மூச்னு இங்கிலீஷ்ல
பேசினப்ப எனக்கு ஒண்ணுமே ஓடலே. கொஞ்சம் மலாய்மொழியும், சீனக்காரன்
பாஷையும் எனக்குத் தெரியும். துணிந்து சைனீஸ் பாஷை பேசினேன்.
அதுக்கப்பறம் தான் அந்த சீனச்சியும் சிரிச்சுக்கிட்டே சைனீஸ் பேசினா.
டிக்கட்டை வாங்கிக்கிட்டு வந்து சேர்ந்தேன். எதுக்குச் சொல்றேன்னா
இங்கிலீஷ் வேண்டியது தான், தெரியாதவங்ககிட்ட அதைப் பேசிச்
சங்கடப்படுத்தறாங்களேங்கிறது தான் வருத்தமாயிருக்கு?’’

     ‘‘மாதவிக்கு அந்தக் கஷ்டமே இல்லே. ரெட்டியார் சார்! அவளுக்கு
இங்கிலீஷ், மலையாளம், தமிழ் எல்லாமே நல்லாப் பேசத் தெரியும்; எழுதவும்
தெரியும்...’’

     ‘‘ஆமாமா! மலையாளத்திலே எல்லாருமே இங்கிலிஷ் நல்லாப்
படிச்சிருப்பாங்க...’’

     ரெட்டியாரிடமிருந்து அவர்கள் விடைபெற்றுப் புறப்படும்போது மாலை
மூன்றரை மணி ஆகிவிட்டது. மாலைக் காபி சிற்றுண்டியையும் முடித்துக்
கொண்டு தான் அவர்கள் பெட்டாலிங்ஜெயாவிலிருந்து புறப்பட்டார்கள்.
புறப்படும்போது ரெட்டியார், ‘‘இந்தா முத்துக்குமார்! இங்கே இருக்கிறவரை எது
வேணும்னாலும் என்கிட்டக் கூசாமக் கேக்கலாம். வெளியிலே சுத்தறதுக்குக்
கார்கீர் தேவையின்னாலும் ஃபோன் பண்ணு...’’ என்று பாசத்தோடு கூறினார்.

     அவருடைய அன்பு முத்துக்குமரனை வியப்பிலாழ்த்தியது. மீண்டும்
ஸ்டிரெயிட்ஸ் ஹோட்டலுக்குத் திரும்