| 	 பியபோது அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி தரும் செய்தி காத்திருந்தது.                   அன்று பகலில் அளவுக்கதிமாகக் குடித்ததினால் கோபால் பாத்ரூமில்     வழுக்கிவிழுந்து முழங்காலில் ஒரு சிறு ஃபிராக்சர் - வந்து ஆஸ்பத்திரியில்     சேர்க்கப்பட்டிருப்பதாகவும் துணை நடிகர்கள் அனைவரும் கோபாலைப்     பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போயிருப்பதாகவும் ஸ்டிரெயிட்ஸ் ஹோட்டல்     ரிஸப்ஷனில் கூறினார்கள். அந்த ரிஸப்ஷனிஸ்டிடமே கோபால்     சேர்க்கப்பட்டிருந்த பிரைவேட் நர்ஸிங் ஹோமின் விலாசமும் இருந்தது. அதை     எழுதி வாங்கிக் கொண்டு ரெட்டியாரின் காரிலேயே அங்கே விரைந்தார்கள்     அவர்கள்.                நர்ஸிங்ஹோம் மவுண்ட்பாட்டன் ரோடிலிருந்தது. அவர்கள் போனபோது     துணை நடிகர்களும், குழுவைச் சேர்ந்த மற்றவர்களும் கூட்டமாகத் திரும்பிக்     கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் அன்றைக்கு மாலையில் நடைபெற     வேண்டிய நாடகம் உண்டா இல்லையா என்பதைப் பற்றியே     குழப்பமடைந்திருப்பது தெரிந்தது. கோபாலின் காலில் ஃபிராக்சர் ஏற்பட்டு -     நடிக்க முடியாமற் போனதனால் அன்றைய நாடகமும் அடுத்த நாட்களுக்கான     புரோகிராமும் கான்ஸல் செய்யப்படும் என்று அவர்கள்     பேசிக்கொண்டிருந்தார்கள். நிறைய வசூலாகி ஏராளமான டிக்கட்டுக்கள் விற்று     தியேட்டரும் வாடகைக்குப் பேசியிருப்பதனால் நாடகங்கள் கான்ஸலாவதனால்     தமக்குப் பெருத்த நஷ்டமேற்படும் என்று அப்துல்லா     கவலையடைந்திருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.                கோபாலின் காலில் கட்டுப்போட்டுப் படுக்கையில் கிடத்தியிருந்தார்கள்.     தூக்க மருந்து கொடுத்திருந்ததனால் அவன் அயர்ந்து     தூங்கிக்கொண்டிருந்தான்.  	 |