‘‘ஆமா...இந்த நல்ல சமயத்திலே ‘வாத்தியார்’ மெட்ராஸ் வந்ததைக் கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரின்னுதான் சொல்லணும்...’’ ‘‘அது சரி! நாடகக் கம்பெனிக்கு என்ன பெயர் வைக்கப்போறே?...’’ ‘‘நீதான் நல்ல பெயரா ஒண்ணு சொல்லேன்...’’ ‘‘ஏன் ‘ஐயா’வைக் கூப்பிட்டு ஒரு நல்ல பெயர் சூட்டச் சொல்றதுதானே!’’ ‘‘ஐயையோ! நமக்கு கட்டாது வாத்தியாரே. அவரு குழந்தைக்குப் பெயர் வைக்கிறதுக்கே ‘ரேட்டை’ உசத்திப்பிட்டாரு...’’ ‘‘சாமி பெயரு வரலாமில்ல?....’’ ‘‘கூடியவரை பகுத்தறிவுக்குப் பொருந்தி வர்ராப்பில இருந்தா நல்லதுன்னு பார்த்தேன்...’’ ‘‘ஏன்?...அந்த லேபிள்ளேதான் நீ மெட்ராசிலே காலந் தள்ளுறியாக்கும்....’’ ‘‘இந்தக் கிண்டல்தானே வேணாம்கிறது...?’’ ‘‘பகுத்தறிவுச் செம்மல்னு உனக்குப் பட்டமே கொடுத்திருக்காங்களே...?’’ ‘‘வம்பளக்காதே... பெயரைக் கண்டுபிடிச்சுச் சொல்லு வாத்தியாரே...?’’ ‘‘ ‘கோபால் நாடக மன்றம்’னே வையி! இந்தக் காலத்திலே ஒவ்வொருத்தனுக்கும் கும்பிட வேறே தெய்வம் இல்லே; தானே தனக்குத் தெய்வம்னு மனிதன் நினைக்கிற காலம் இது. கண்ணாடியிலே தன் உருவத்தைப் பார்த்துத் தானே கைகூப்புகிற காலம் இல்லையா?’’ ‘‘ ‘கோபால் நாடக மன்றம்’னு என் பெயரையே வைக்கிறதிலே எனக்குச் சம்மதம்தான். ஆனா ஒரு விசயம் |