நிலையை அறிய முயன்றவனாகக் கேள்வி கேட்டான் முத்துக்குமரன். ‘அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ எதை எழுதினாலும் பேர் வர்ராப்பிலே செய்யிறது என் பொறுப்பு’’ என்றான் கோபால். ‘‘அப்படீன்னா?...அதுக்கு அர்த்தம்!’’ என்று சந்தேகத்தோடு பதிலுக்கு வினவினான் முத்துக்குமரன். 3 ‘‘நீ சும்மா எழுது வாத்தியாரே! அதெல்லா நான் பார்த்துக்கிறேன். ‘நடிகர் திலகம் கோபால் நடிக்கும் நவரச நாடகம்’னு ஒருவரி விளம்பரப்படுத்தினாப் போதும், தானா ‘ஹவுஸ்புல்’ - ஆயிடும்...சினிமாவிலே கிடைக்கிற புகழை நாடகத்துக்குப் பயன்படுத்தணும். அதுதான் இப்ப ‘டெக்னிக்.’ ’’ ‘‘அதாவது எழுதறவன் எந்தப் பயலாயிருந்தாலும் உன்பேர்ல நாடகம் தடபுடலாகிவிடும்னு சொல்றியா?’’ ‘‘பின்னென்ன? சும்மாவா?’’ ‘‘அப்படியானா நான் எழுத முடியாது!’’ முத்துக்குமரனின் குரலில் கடுமை நிறைந்திருந்தது - சிரிப்பு முகத்திலிருந்து மறைந்து விட்டது! ‘‘ஏன்? என்ன?’’ ‘‘உன்னுடைய லேபிளில் மட்டமான சரக்கையும் அமோகமாக விற்க முடியும் என்கிறாய் நீ! நானோ நல்ல சரக்கை மட்டமான லேபிளில் விற்க விரும்பவில்லை. இதைக் கேட்டவுடன் கோபாலுக்கு முகத்தில் அறைந்தது போலாகிவிட்டது. வேறொருத்தன் இப்படிச்சொல்லியிருந்தால் கன்னத்தில் அறைந்து ‘கெட் அவுட்’ என்று |