பற்றி அவர்கள் தங்களுக்குள் தாராளமாகவும், சுதந்திரமாகவும் விமர்சித்துக் கொண்டார்கள்; பாட்டில்கள் காலியாகக் காலியாக - அவற்றில் இருந்த அளவு குறையக் குறையப் பேச்சின் தரம் குறைந்து கொண்டே வந்தது. தனிப்பாடல், திரட்டு முதலிய பழைய நூல்களிலிருந்து சில விரசமான கவிதைகளையும், சிலேடைகளையும் கோபாலிடம் சொல்லி, விவரிக்கத் தொடங்கினான் முத்துக்குமரன். நேரம் போவதே தெரியவில்லை. இதே பாட்டுக்களையும், பேச்சுக்களையும், அவர்கள் பாய்ஸ் கம்பெனியிலிருந்த காலத்திலும் பேசிக் கொண்டது உண்டு. ஆனால், அப்போது பேசிக் கொண்டதற்கும் இப்போது பேசிக்கொள்வதற்கும் இடையில் எவ்வளவோ வேறுபாடு இருந்தது. பாய்ஸ் கம்பெனியில் மது மயக்கத்தை அடைய வசதிகள் கிடையாது. இப்படி விஷயங்களைப் பயந்து பயந்துதான் பேசிக்கொள்ள வேண்டும். பெண் வாடையே வீசாத சூனியப் பிரதேசம் போல் கம்பெனி இருக்கும். இப்போது அப்படி இல்லை. பன்னிரண்டு மணிக்குமேல் தள்ளாடி தள்ளாடி அவுட்ஹவுஸை நோக்கி நடந்த முத்துக்குமரனைப் பாதி வழியில் விழுந்துவிடாமல் நாயர்ப் பையன் தாங்கிக் கொண்டு போய்ப் படுக்கையில் விட்டான். ‘‘ஞான் டெலிபோன் கீ போர்டுக்குப் பக்கத்திலே உறங்கும். ஏதாவது வேணும்னா ஃபோனில பறயட்டும்’’ என்று கூறிப் படுக்கை அருகே இருந்த ஃபோன் எக்ஸ்டென்ஷனைக் காண்பித்துவிட்டுப் போனான் பையன். அவன் பேசிய குரலும், காட்டிய ஃபோனும் மங்கலாக முத்துக்குமரனுக்குக் கேட்டன; தெரிந்தன. மங்கலாக முத்துக்குமரனுக்குக் கேட்டன; தெரிந்தன. உடலில் அங்கங்கள் வெட்டிப் போட்டது போலவோ அடித்துப் போட்டது போலவோ, சோர்ந்திருந்தன. தூக்கம் கண்களில் வந்து கொஞ்சியது. அந்த வேளை பார்த்து சொப்பனத்தில் கேட்பதுபோல் அறைக்குள் டெலிபோன் மணி கேட்டது. இருட்டில், டெலிபோ |