பக்கம் எண் :

40சமுதாய வீதி

     ‘‘வந்திருந்த மத்தப் பொண்ணுங்களிலே சிலரை நாடகங்களிலே வர்ர உப
பாத்திரங்களுக்காக எடுத்துக்கலாம்னு பார்க்கிறேன்...’’

     ‘‘அதாவது சரித்திரக் கதையானால் தோழி - சேடி. சமூகக் கதையானால்
கல்லூரி சிநேகிதி...பக்கத்து விட்டுப் பெண் இப்படி எல்லாம்
வேண்டியிருக்கும்...சமயத்திலே அந்த உப பாத்திரங்கள் வாழ்க்கைக்குகூடத்
தேவைப்படலாம்...’’

     கிண்டல் பொறுக்க முடியாமல் பேசுவதை நிறுத்திவிட்டு முத்துக்குமரனின்
முகத்தை உற்றுப் பார்த்தான் கோபால். உடனே பேச்சை மாற்றக் கருதிய
முத்துக்குமரன் சிரித்துக் கொண்டே,

     ‘‘அதென்னமோ, கோபால் நாடக மன்றம்னு பெயர் வைக்கிறதுக்கு
முன்னே, உன்னோட செக்ரட்டரியை இன்கம்டாக்ஸ் விஷயமாகக் கலந்து
பேசணும்னியே? பேசியாச்சா?’’...என்று வினவினான். அதற்குக்
கோபாலிடமிருந்து பதில் கிடைத்தது.

     ‘‘அதெல்லாம் செக்ரட்டரிக்குக் காலையிலே ஃபோன் செய்து
தெரிஞ்சுக்கிட்டேன். ‘கோபால் நாடகமன்றம்’னே பெயர் வைக்கலாம். அதைத்
தெரிஞ்சுக்கிட்டுத்தான் உன்னைப் பார்க்க வந்தேன்...’’

     ‘‘சரி! மேலே என்ன செய்யணும்?’’

     ‘‘இந்த அவுட் ஹவுஸ்லே உட்கார்ந்து எவ்வளவு சீக்கிரமா முடியுமோ,
அவ்வளவு சீக்கிரமா வாத்தியார் நாடகத்தை எழுதி முடிக்க வேண்டியதுதான்
பாக்கி. இங்கே எல்லாம் வசதியா இருக்கும். எது வேணும்னாலும் உடனே
அந்த நாயர்ப் பையனிட்ட ஒரு வார்த்தை சொன்னாப் போதும். இந்த அவுட்
ஹவுஸ் வடநாட்டு நடிகர் திலகம் ‘பிலிப்குமார்’ இங்க வந்தப்ப அவர்
தங்கறத்துக்காகக் கட்டினதாக்கும். அவருக்கப்புறம் இதுலே தங்கற முதல் ஆள்
நம்ம வாத்தியார்தான்...’’