பக்கம் எண் :

42சமுதாய வீதி

     ‘‘நான் ஒண்ணும் அவசரப்படுத்தலே. முடிஞ்சவரை சீக்கிரமா எழுதினா
நல்லதுன்னுதான் சொன்னேன்...குடிக்கிறதுக்கு காபியோ, டீயோ, ஓவலோ எது
வேணும்னாலும் ஃபோன்லே சொன்னா உடனே இங்கே தேடி வரும்...’’

     ‘‘காபியோ, டீயோ, ஓவலோ...தான் குடிக்கறதுக்குத் தேடி வருமா அல்லது
குடிக்கிறதுக்கு வேறே ‘அயிட்டங்களும்’ கேட்டாத் தேடி வருமா?’’

     ‘‘கண்டிப்பா! உடனே தேடி வரும்...’’

     ‘‘என்னை ஏறக்குறைய உமர்கையாமாகவே ஆக்கறே...? இல்லையா?...’’

     ‘‘சரி! சரி! எதையாவது சொல்லிக்கிட்டிரு...நான் போகணும்...பத்து
மணிக்கு ‘கால்ஷீட்’ இருக்கு. வரட்டுமா!’’ என்று கேட்டுக் கொண்டே எழுந்து
புறப்பட்டுவிட்டான் கோபால். முத்துக்குமரன் இன்னும் அவுட் ஹவுஸின்
வராந்தாவிலேயே நின்று கொண்டிருந்தான். புற்களில் பனியால் விளைந்திருந்த
புகை நிறம் மாறி வெயிலால் மேலும் பசுமை அதிகமாகியது. ரோஜாப்பூக்களின்
சிவப்பைப் பார்த்த போது மாதவியின் உதடுகளை நினைவு கூர்ந்தான்
முத்துக்குமரன். உள்ளே ஃபோன் மணியடிப்பது கேட்டது. விரைந்து சென்று
எடுத்தான்.

     ‘‘நான்தான் மாதவி பேசறேன்.’’

     ‘‘சொல்லு! என்ன சங்கதி!’’

     ‘‘இப்பத்தான் ‘சார்’ ஃபோன் பண்ணிச் சொன்னாரு. உடனே உங்களைக்
கூப்பிட்டேன்...’

     ‘‘சார்’னா யாரு?’’

     ‘‘அவர்தான் நடிகர் திலகம் சார். ஃபோன் பண்ணிச்சொன்னாரு.
நாளையிலேருந்து ‘ஸ்கிரிப்ட்’ டைப்