படிப்பதற்காகப் பிரித்தான் முத்துக்குமரன். கடிதத்தில் இரண்டே இரண்டு வரிகள்தான் எழுதப்பட்டிருந்தன. கீழே கோபாலின் கையெழுத்தும் இருந்தது. இரண்டாவது முறையாகவும், மூன்றாவது முறையாகவும், திரும்பத் திரும்ப அதைப் படித்தான் முத்துக்குமரன். அவன் மனத்தில் பலவிதமான உணர்வுகள் அலைமோதின, நண்பன் கோபால் தன்னை நண்பனாக நினைத்து அன்புரிமையோடு பழகுகிறானா அல்லது பட்டினத்துக்குப் பிழைக்க வந்திருக்கும் ஒருவனிடம் அவனுடைய எஜமான் பழகுவது போல் பழகுகிறானா என்பதைக் கண்டுபிடிக்க முயன்றான் முத்துக்குமரன். கோபால் அந்தத் தொகையுடன் தன் பெயருக்கு வைத்திருந்த கடிதத்தைப் படித்து அதிலிருந்து கோபாலின் மனத்தை நிறுத்துப் பார்த்துவிட முடியும் என்று தோன்றியது முத்துக்குமரனுக்கு. கடிதம் என்னவோ மிகமிக அன்போடும் பாசத்தோடும் எழுதப்பட்டிருப்பது போலத்தென்பட்டது. 4 ‘‘அன்புள்ள முத்துக்குமார் என்னுடைய செயலைத் தவறாக நினைக்காமல் - இதனுடனிருக்கும் ஆயிரம் ரூபாயைக் கைச்செலவுக்கு வைத்துக் கொள். சமயத்தில் நான் ஊரிலிருந்தாலும் இல்லாவிட்டாலும், யாரிடம் கேட்பது, எப்படிக் கேட்பது, என்று புதிய ஊரில் புதிய இடத்தில் நீ செலவுக்குத் திண்டாடக் கூடாது என்ற நல்லெண்ணத்துடனேயே இதை உனக்குக் கொடுத்தனுப்புகிறேன்’’ என்றெழுதிக் கீழே கோபால் கையொப்பம் இட்டிருந்தான். - இந்தச் சிறிய கடிதத்தைப் படித்துவிட்டு - உடனிருந்த ரூபாய் நோட்டுக்களையும் பார்த்தபோது |