பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி65

     ‘‘அப்படியே கவனித்துக் கொள்கிறேன்’’- என்ற பாவனையில் தலையை
ஆட்டிச் சிரித்தாள் மாதவி.

     - எழுதி முடித்திருந்தவரை தன் கையெழுத்துப் பிரதிகளை அவளிடம்
கொடுத்து - டைப் செய்யச் சொன்னான் முத்துக்குமரன். அவள் அதை
வாங்கிப் பார்த்ததுமே முதலில் அவன் கையெழுத்தைப் புகழத் தொடங்கினாள்;

     ‘‘உங்க கையெழுத்தே முத்து முத்தா ரொம்ப நல்லாயிருக்குதே!’

     ‘‘அந்தக் காலத்திலே ஏட்டிலே எழுத்தாணியாலே எழுதிப் பழகின
கையாச்சே? நல்லா இருக்காமே பின்னே வேற எப்படியிருக்கும்?’’ என்று
அவனும் தற்பெருமையாகச் சொல்லிக்கொண்டான். அவள் மேலும் அவனைப்
புகழ்ந்தாள்.

     ‘‘உங்க தற்பெருமைதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.’’

     ‘‘உலகத்திலே கஷ்டப்படறதுக்குன்னே பிறக்கப்போற கடைசிக் கலைஞன்
வரை சொந்தம் கொண்டாடறத்துக்கு அவனோட செருக்கு ஒண்ணுதான்
அவனுக்குன்னு மீதமிருக்கு.’’

     எத்தனையோ பேரிடம் செருக்கு இருந்தாலும் சில பேருக்குத்தான்
அதுவே ஒரு வீரமாகவும் கம்பீரமாகவும் இருக்கும்...’’

     ‘‘புகழாபரணன்’னு பழைய தமிழில் ஒரு தொடரே உண்டு மாதவி!’’

     ‘‘சொல்றதுக்கு ரொம்ப நல்லாயிருக்கு. புகழைத் தனக்கு ஆபரணமாக
அணிஞ்சிக்கிறவங்கன்னு தானே இதுக்கு அர்த்தம்?’’

     ‘‘ஆமா! ‘புகழே இன்னார் கழுத்திலே நாம் ஆபரணமாக அணி
செய்யணும்னு ஆசைப்படற ஆள்’னும் அர்த்தம் சொல்லலாம்’’ - என்று
அதற்கு விளக்கம்