பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி67

     பகல் உணவை அங்கேயே அவுட் ஹவுஸு க்குக் கொண்டுவரச் சொல்லி
இருவரும் சாப்பிட்டார்கள். அவனுக்கு டேபிளில் இலை போட்டு அவள்
பரிமாறினாள்.

     ‘‘இப்படி எனக்கு நீ இலை போட்டுப் பரிமாறும் காட்சியைத் திடீர்னு
யாராச்சும் பார்த்தா என்ன நினைச்சுப்பாங்க...’’

     ‘‘ஏன்? எதுக்காக இப்படிக் கேட்கிறீங்க?’’-

     ‘‘ஒண்ணுமில்லே! இந்த ரெண்டு பேரும் எப்படி இவ்வளவு சீக்கிரம்
ஒண்ணுபட்டாங்கன்னு பார்க்கிறவங்களுக்குப் பிரமிப்பாகவும் பொறாமையாகவும்
இருக்காதான்னு கேட்டேன்...’’

     ‘‘இப்படித் திடீர்னு சந்திக்கறதுக்காகவும் - ஒண்ணு சேர்றதுக்காகவும்
உலகத்தின் எந்த இரண்டு மூலையிலோ எந்த இரண்டு ஆண் பெண்களோ
எந்தக் காலத்திலும் மீதமிருக்கிறார்கள்னுதான் சொல்லத் தோன்றுகிறது.

     ‘‘அது சரி! என்னைப் பார்த்ததுமே உனக்கு ஏன் என் மேலே இவ்வளவு
பிரியம் விழுந்திச்சு...’’

     ‘‘இந்தக் கேள்வி ரொம்ப அக்கிரமமானது; அகங்காரமானது. எப்படியோ
வந்து ராஜா மாதிரி கால்மேலே கால்போட்டு உட்கார்ந்து கொண்டு என்னை
மயக்கினது மில்லாமே இப்ப ஒண்ணுமே தெரியாத அப்பாவி மாதிரிக் கேள்வி
கேட்கறதைப் பாரு...?’’

     ‘‘அப்படியா? நான் உன்னை மயக்கிப்பிட்டேனின்னா குற்றஞ் சாட்டறே?’’

     ‘‘என்னை மட்டுமில்லே! உள்ளே கம்பீரமா நுழைஞ்சு கால்மேல் கால்
போட்டு ராஜாவாட்டமா உட்கார்ந்தப்ப அங்கே இருந்த அத்தினி பேரையும்
தான் மயக்கினீங்க. ஆனால் என்னைத்தவிர மத்தவங்களுக்குத் தைரியமில்லே