| 	 நடித்தேன். அப்போது கோபால் சார் என்னைச் சந்தித்துப் பேசுவதாக வந்த     காட்சி இது’’ எனக் கூறினாள் மாதவி.                ‘‘அப்படியா? அன்று முதன் முதலாக உன்னை ‘இண்டர்வ்யூ’வில்     பார்த்தபோது, உனக்கும் கோபாலுக்கும் அதற்குமுன் அறிமுகமே கிடையாது;     எல்லாரையும் போல் நீயும் புதிதாகத்தான் வந்திருக்கிறாய் என்றல்லவா நான்     நினைத்தேன்? நீயோ மெட்ராசுக்கு நீ வந்த நாளிலிருந்து உன்     முன்னேற்றத்திற்குக் கோபால் தான் எல்லா உதவியும் செய்ததாகக்     கூறுகிறாய்?...’’                ‘‘நாடகக் குழுவுக்கான நடிகைகள் பகுதியில் என்னைத்தான்     தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் முன்னாலேயே முடிவு     செய்துவிட்டாலும் - ஒரு முறைக்காக எல்லாரோடும் சேர்ந்து என்னையும்     அங்கே ‘இண்டர்வ்யூக்கு’ வரச் சொல்லியிருந்தார். அவர் அப்படிச்     சொல்லியிருந்ததனால் நானும் நாடகக் குழுவுக்கான இண்டர்வ்யூவின் போது     முற்றிலும் புதியவளைப் போல அங்கு வந்து உட்கார்ந்திருந்தேன்.’’                ‘‘ஆனால் திடீரென்று என்னிடம் மட்டும் தேடி வந்து ரொம்ப நாள்     பழகியவளைப் போல சுபாவமாகப் பேசிவிட்டாய்.’’                அவள் பதில் பேசாமல் புன்னகை பூத்தாள். விருந்து மிகவும் ருசியாகவும்     வாசனையாகவும் இருந்தது. புளிச்சேரி, எறிசேரி, சக்கைப் பிரதமன், அவியல்     என்று மலையாளப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன. நடுநடுவே மாதவி     ஏதாவது சொல்லிய போதெல்லாம் அவளுக்குப் பதில் சொல்லத் தலைநிமிர்ந்த     முத்துக்குமரனின் கண்களில் அந்தப் படமே தென்பட்டது. மாதவியும் அதைக்     கவனிக்கத் தவறவில்லை.                இந்த ஒரு படத்தைத் தவிர அங்கே மாட்டப்பட்டி  	 |