| 	 சமயங்களில் அப்பிடிக்கூடச் செய்ய வேண்டியதாகத்தான் இருக்கும்’’ - என்று     பதில் கூறினான். முத்துக்குமரனுக்கு அது கோபமூட்டினாலும் அவன் பேசுவதை     நிறுத்திக் கொண்டான். ஜில் ஜில் அங்கப்பனிடம் கோபாலைப் பற்றி அளக்கத்     தொடங்கினான்:                ‘‘இந்தா அங்கப்பன்! நம்ப சார் ஒரு வார்த்தை சொல்லி     அனுப்பிச்சார்னா ஆயிரம் ஸ்டூடியோக்காரனுக ஸீன்ஸ், ஸெட்டிங்ஸ்லாம் தயார்     பண்ணி வீடு தேடிக் கொடுத்து அனுப்புவான்கள். ஆனால், சாரே பாய்ஸ்     கம்பெனியிலே இருந்தவரானபடியாலே உன்னை மாதிரி முறையா நாடக ஸீன்ஸ்     எழுதறதுலே ரொம்ப வருஷமாப் பழகின ஒருத்தரிட்டவே வாங்கணும்னு     ஆசைப்படராரு.’’                ‘‘பேஷா வாங்கட்டும்! எனக்கும் பெருமைதான். அம்மா மகாலட்சுமி     மாதிரி வந்திருக்காங்க...அவர்களைப் பார்க்கறப்பவே லட்சுமி கடாட்சம்     பொங்குது...’’ - என்று சம்பந்தமில்லாமல் மறுபடியும் மாதவியைப் பற்றிப்     புகழத் தொடங்கினான் அங்கப்பன்.                ‘‘இவனுக்கு உன்னைத் தவிர இங்கே வந்திருக்கிற யாருமே கண்ணுலே     படலே!’’- என்று மாதவியின் காதருகிலே முணுமுணுத்தான் முத்துக்குமரன்.     சிறிது நேரத்தில் அங்கப்பனிடம் இருந்த புதிய, பழைய ஸீன்களை எல்லாம்     பார்த்து முடித்தாயிற்று. விலைக்கு வாங்குவது பற்றிய பேரம் தொடங்கியது.     வந்திருக்கிற நடிகர் திலகத்தின் பணச்செழிப்புக்கும்,  கௌரவத்திற்கும் ஊறு     நேராமல் விலை சொல்ல வேண்டுமென்று நினைத்தோ என்னவோ,     அரண்மனை விலையைவிட அதிக விலையை அரண்மனை ஸினுக்கும்,     மற்றவற்றிற்கும் கூறினான் அங்கப்பன். விலைகளைக் கேட்டதும் கோபால்     தயங்கினான்.               ‘‘இந்த விலைக்குப் புதுசாவே எழுதச் சொல்லி  	 |