| 	 ஆர்டர் கொடுக்கலாம் போலிருக்கே?’’-                   ‘‘பேஷாக் கொடுங்க... எழுதித் தர்றேன்’’- என்று அந்த யோசனையையும்     விடாமல் ஏற்றுக் கொண்டான் அங்கப்பன்.                - மறுபடியும் புதிய ஸீன்கள் எழுதுவதற்கான பேரம் தொடங்கியது.     ஸீன்களை முடித்துத் தருவதற்குரிய காலம் பற்றி அங்கப்பன் கூறியதை     கோபால் ஏற்றுக் கொள்ளவில்லை. மறுபடியும் ஏற்கனவே எழுதி வைத்திருந்த     ஸீன்களைப் பற்றிய பேரம் திரும்பி ஒருவிதமாக நிறைவேறியது. ஜில் ஜில்     இரண்டு பக்கமும் மாறி மாறிப் பேசி ஒரு வழியாகப் பேரத்தை முடித்து     வைத்தான். அவர்கள் அங்கிருந்து புறப்படும்போது பகல் ஒரு மணிக்கு     மேலாகிவிட்டது.                ‘‘ஜில் ஜில்’’ அன்று பகலில் கோபாலுடன் சாப்பிட்டான். ‘டைனிங்’     டேபிளில் கோபால், ஜில் ஜில், முத்துக்குமரன் மூவரும் அமர்ந்தவுடன்      பரிமாற வந்த சமையற்காரனைத் தடுத்துவிட்டு, ‘நீ பரிமாறேன் மாதவி!’ என்று     திடீரென்று மாதவிக்குக் கட்டளையிட்டான் கோபால். முத்துக்குமரனுக்கு அது     மிகவும் ‘சீப்’ ஆகத் தோன்றியது. மாதவி அதற்கு இணங்கக் கூடாது என்று     அவன் எதிர்ப்பார்த்தான். கதாநாயகியாக நடிப்பது, பாட்டுப் பாடுவது, டைப்     செய்வது, டைனிங் டேபிளில் பரிமாறுவது ஆகிய எல்லாக் காரியங்களையும்     ஒருத்தியையே செய்யச் சொல்லி அடக்கி ஆளும் தன்மை தனக்கு                 இருப்பதாகக்    கோபால் மற்றவர்களுக்குக் காட்ட விரும்புவதை முத்துக்குமரன்          கண்டான்.    முத்துக்குமரன் நினைத்ததைப் போல் மாதவி அந்தக் காரியத்துக்கு          இணங்க    மறுக்கவில்லை. உற்சாகமாகப் பரிமாறத் தொடங்கினாள். அவள்          அப்படிச்    செய்தது முத்துக்குமரனுக்குப் பிடிக்கவில்லை. அவன் முகத்தில்          மலர்ச்சி    குன்றியது. சிரிப்பு அறவே மறைந்து விட்டது. பரிமாறிக் கொண்டி  	 |