பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி97

ருந்த மாதவியும் முத்துக்குமரனின் மாறுதலையும் புரிந்து கொண்டாள். ஜில்
ஜில்லும் கோபாலும் அட்டகாசமாகச் சிரித்துப் பேசிக் கொண்டே
சாப்பிட்டார்கள். முத்துக்குமரனோ சாப்பிட்டு முடிக்கிறவரை மௌனத்தைக்
கலைக்கவே இல்லை. முத்துக்குமரனின் மௌனத்தைக் குறிப்பிட்டு ஜில் ஜில்
கோபாலைக் கேட்டான்: ‘‘என்ன, சார் ஒண்ணும் பேசவே மாட்டேங்கிறாரு...’’

     ‘‘அவரு ஏதாவது யோசனை பண்ணிக்கிட்டிருப்பாரு’’ என்றான் கோபால்.
அப்படி அவர்கள் இருவரும் தன்னைப் பற்றிப் பேசிய போதுகூட
முத்துக்குமரன் வாய் திறக்கவில்லை.

     வாஷ்பேஸின் வரை எழுந்திருந்து போய்க் கை கழுவி வரச்
சோம்பல்பட்டவனாகக் ‘‘கை கழுவுவதற்கு ஒரு கும்பாவில் தண்ணீர் கொண்டு
வா’’ என்று குரல் கொடுத்தான் கோபால். கைகழுவுவதற்கு நாயர்ப்
பையன்தான் தண்ணீர் கொண்டு வருவான் என்று எதிர் பார்த்தான்
முத்துக்குமரன். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஒரு சிவப்புநிற பிளாஸ்டிக்
கும்பாவில் மாதவி தான் கைகழுவுவதற்குத் தண்ணீர் கொண்டு வந்தாள்.
அவள் டைனிங் டேபிள் அருகே வந்து அந்தக் கும்பாவைக் கையில் ஏந்திக்
கொண்டு நின்றதும் - கோபால் உட்கார்ந்தபடியே அதற்குள் கைகளை விட்டுக்
கழுவினான். முத்துக்குமரனுக்கு மனம் குமுறியது. அந்த உபசாரம் தன்னோடு
போகாமல்,

     ‘‘சும்மா நீங்களும் இப்படியே கழுவிவிடுங்க’’ என்று ஜில் ஜில்லையும்
முத்துக்குமரனையும் வேறு வேண்டினான் கோபால். ஜில் ஜில் மறுத்து
விட்டான். முத்துக்குமரன் ‘‘என்னாலே வாஷ்பேஸின் வரை நடந்து போக
முடியும்னு நினைக்கிறேன்’’ என்று பதிலும் சொல்லி விட்டுத்தான்
எழுந்திருந்தான். கோபாலின் திமிரைக் கண்டு அவன் மனம் கோபமும்
கொதிப்பும் அடைந்திருந்