பக்கம் எண் :

98சமுதாய வீதி

தது. சாப்பாடு முடிந்த சிறிது நேரத்திற்கெல்லாம் கோபாலும் ஜில் ஜில்லும்
புறப்பட்டுப் போய் விட்டார்கள். போகும் போது ஜில் ஜில் கூறிவிட்டுப்
போனான். ‘‘சார்! உங்களை ஒரு நாள் இண்டர்வ்யூ பண்றத்துக்கு வரணும்.’’

     பதில் சொல்லாமல் ஜில் ஜில்லை நோக்கித் தலையை அசைத்தான்
முத்துக்குமரன். அவர்கள் போனதுமே அவன் அவுட்ஹவுஸு க்கு வந்து தன்
வேலையைக் கவனிக்கத் தொடங்கினான். மாதவி இன்னும் வரவில்லை. அவள்
சாப்பிட்டுவிட்டு வர அரைமணி நேரம் ஆகுமென்று தோன்றியது. அவள்
வரவை எதிர்பார்த்து அவன் மனம் இருந்ததனால் - எழுத்தில் கவனமே
செல்லவில்லை. இத்தனை அடிமைப்புத்தி அவளுக்கு எப்படிப் பழகியதென்று
சிந்திக்கும் போதே அவனால் பொறுமையாக இருக்க முடியவில்லை.
தன்னுடைய அன்பிற்கும், பிரியத்துக்கும் உரியவள் இன்னொருவனுக்கு முன்
அடிமை போல சேவை செய்து நிற்பதை அவனால் சகித்துக் கொள்ள
முடியவில்லை. உடன் உட்கார்ந்து சாப்பிடும்படி கேட்கப்பட வேண்டியவளை -
உத்தரவிட்டு வேலை வாங்கும் கொழுப்பை அவன் வெறுத்தான். ‘கோபால்
இத்தனை பெரிய கிராதகனாக மாறியிருப்பான்’ என்பதை அவனால் நம்பவே
முடியவில்லை. இப்படி அவன் யோசித்துக் கொண்டிருந்த போது மாதவியே
கையில் வெற்றிலை - பாக்குப் பழங்கள் அடங்கிய வெள்ளித் தட்டுடன் வந்து
சேர்ந்தாள்.

     ‘‘உங்களுக்காக வெற்றிலை பாக்கு எடுத்துக் கொண்டு வந்தேன். நீங்கள்
அவசரமாக வந்து விட்டீர்கள் போலிருக்கிறது.’’

     ‘‘எச்சில் கிண்ணம் ஏந்துகிற கைகளால் - வெற்றிலைத் தட்டும் ஏந்திவர
முடியுமானால் நான் எப்படி அதைப் போட்டுக் கொள்வது?’’