மனோன்மணீயம்
4

மணீயத்தில் தம் ஆசிரியர் சுந்தரமுனிவரை ஒரு சிறந்த நாடக உறுப்பாக அமைத்திருக்கின்றார். இவருடைய கல்வித் திறமையை யறிய விரும்புவோர் இவரது அரும்பெரு நூலாகிய மனோன்மணீயத்தைப் பயின்றறிதல் ஒன்றே போதும். இக்காலத்தில் இவர்தம் ஆசிரியர் சந்தர முனிவரியற்றிய "நிஜானந்த விலாசம்" என்னும் நூலை இவரும் இவர்தம் நண்பர் திரு. மாவடி சிதம்பரம் பிள்ளையவர்களுமாக அச்சிட்டு வெளியிட்டார்கள்.

1878-ம் ஆண்டு மாசித்திங்கள், இவர்தம் அருமை அன்னையார் திருநெல்வேலியில் சிவபிரான்றிருவடி நீழலெய்தினர். ஆதலால், இவர்தம் தந்தையாரைப் பேணும் பொறுப்பு இவர்க்கு இயல்பாகவே அமைந்துவிட்டது. 'தந்தை தாய்ப் பேண்' என்று ஒளவைப் பிராட்டியார் கூறிய முதுமொழிக்கிணங்க, இவர் தம் பெற்றோரிடத்தில் பேரன்புவைத்து ஒழுகி வந்தனர். புறக்கண்ணாற் காணப்படுந் தாய்தந்தையரிடத்து வைக்கும் அன்பே, அகக்கண்ணாற் காணப்படும் கடவுளிடத்துக் காட்டும் அன்புக்கு அடிப்படையென்பதை இவர் நன்குணர்ந்தவர். தம் ஆசிரியத் தொழிலிலிருந்து வரும் ஊதியம் முழுவதையுமே, தம் அருமைத் தந்தையிடங் கொடுத்துத் தம் சிறு செலவுகளுக்குக்கூடத் தந்தையிடங் கேட்டுத் தொகை பெறுவது இவர் வழக்கம். இவருடைய ஆங்கிலப் படிப்பானது, பண்டைத் தமிழர் வழக்கத்திற்கிணங்க, இவர் தம் பெற்றோரிடங் காட்டி வந்த வணக்கத்தையும் பணிவையும் ஒரு சிறிதுங் குறைக்கக் காரணமாயிருக்கவில்லை.

1879-ம் ஆண்டில், திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் சிறந்த அறிவு நூற்புலவராயிருந்த டாக்டர் ஹார்வி (Dr. Harvey) துரை யவர்கள் தம் தாய்நாடு செல்லும்போது, நமது சுந்தரம் பிள்ளையவர்களைத் தாமிருந்த வேலையில் அமர்த்திச் சென்றனர். அதன்பின், 1880-ம் ஆண்டில், இவர் (M.A.) எம்.ஏ. தேர்வு பெற்றார். இக்காலத்தில் இவர், தம் ஆசிரியத் தொழிலைச் செவ்வனே நடத்தி வந்ததுமன்றி, தமிழிலக்கிய வளர்ச்சிக்கான உழைப்பிலும் தலைசிறந்து நின்றார். இவர் திருநெல்வேலியிலிருந்தகாலை, எழுதத் தொடங்கிய மனோன்மணீயம், நூற்றொகை விளக்கம் என்னும் நூல்களைச் செவ்வனே எழுதி முடித்தனர். திருவிதாங்கோட்டின் பல பகுதிகளிலுமுள்ள பழைய திருக்கோயில்களிற் பாழடைந்து பாதுகாப்பற்றுக்