மனோன்மணீயம்
5

கிடந்த கல்வெட்டுக்களைப் பிள்ளையவர்கள் தமது பொருட் செலவிலேயே ஆராயத் தொடங்கினர்.

இங்ஙன மிருக்குங்கால், 1882-ம் ஆண்டு இறுதியில், மாட்சிமை மிக்க விசாகந் திருநாள் மகாராஜா அவர்கள் இவரது கல்விப் பெருமையை நன்குணர்ந்து தம் அரண்மனையில் பிறவகை சிரஸ்தார் (Commissioner of Separate Revenue) என்னும் உயர்ந்த வேலையில் இவரை அமர்த்தினார். இவர்தம் பெருங்கல்விக்கும் மனநிலைமைக்கும் மடிமிக்க அவ்வேலை பொருந்தியதாயில்லை. ஆனால் அவ்வேலையில் அமர்ந்திருக்கும்பொழுது இவர் சட்டக்கல்லூரியில் சட்ட நூல் பயின்று வந்தார். அத்தருணத்தில் அரசர் கல்லூரித் தலைவர் (Principal) (மிஸ்டர்) ராஸ்துரையவர்கள் தாய்நாடு செல்ல நேர்ந்தமையின், அத்தலைமை யாசிரியர் பதவியில் டாக்டர் ஹார்வி துரையவர்கள் அமர்ந்தார்கள். டாக்டர் ஹார்வி துரையவர்கள் தாம் முன் பார்த்து வந்த அறிவு நூற் புலவர் வேலைக்குத் தக்கார் சுந்தரம்பிள்ளையவர்களே என்று கண்டு அவரை அவ்வேலையில் 1885-ம் ஆண்டில் அமர்த்தினர். பிள்ளையவர்கள் அக்காலமுதல் தம் இறுதிக் காலம் வரை அப்பேராசிரியர் வேலையிலேயே யிருந்து, அறிவு நூற்பொருள்களை மாணவர்கட்கு அவாவுண்டாம்படி பெருந்திறமையுடன் கற்பித்து வந்தனர். அவருடைய விரிந்த எண்ணங்களும், நகைச்சுவை தோன்றப் பேசுந்திறனும், யாற்றொழுக்குப்போற் சொற்களமைக்கும் ஆற்றலும், சொல்வன்மையும், இயற்கை நுண்ணறிவும் கல்லூரி யாசிரியர்களாலும், மாணவர்களாலும், ஏனையோராலும் பெரிதும் பாராட்டிப் பேசப்பட்டன.

1884-ம் ஆண்டு, பிள்ளை யவர்கள், வழக்கறிஞர் சாமிநாத பிள்ளையர்கள், இசைப்புலவர் திரு. T. இலக்குமணப் பிள்ளையர்கள் தந்தையார் வலிய மேலெழுத்துத் திரவியம் பிள்ளையவர்கள், (உண்டியல் கடை) சு. கணபதிப் பிள்ளையவர்கள் தந்தையார் சுப்பிரமணிய பிள்ளையவர்கள் முதலியவர்களுடன் சேர்ந்து, சைவசமய விளக்கத்தையும், தமி்ழ்மொழி வளர்ச்சியையுங் குறியாகக் கொண்டு, 'சைவப் பிரகாச சபை' என்னும் பெயரிய ஒரு சபையை நிறுவி, அதன் வாயிலாகப் பணி செய்து வந்தார்கள். அச் சபைக்கு ஒரு கட்டிடம் அமைப்பதற்கு எல்லோருஞ் சேர்ந்து ஓர் இடம் வாங்கி, அதில் 1885-ம்