மனோன்மணீயம்
19

காட்டிக் கொடுத்து மாற்றலராகிய மன்னவரையும் இரக்ஷித்துப் பின்பு வேண்டுமேற் பொருது தமது வீரம் நாட்டலேயாம்’’ என அவனுக்கு விடை கூறி, அவன் கூறிய சுருங்கை வழியே ஜீவகன் சபைக்கு வழிகாட்டி வரும்படி கட்டளை யிட்டான். இம்மொழி கேட்ட பாவி இடியொலி கேட்ட பாம்புபோலத் திடுக்கிட்டுத் திகைத்து நின்றான். ஆயினும் தானிட்ட கட்டளை மீறில் சித்திரவதையே சிக்ஷையா மென்று சேரன் சினத்துக் கூற, அதற்கு அஞ்சி அவ்வாறே கற்படைக்கு வழிகாட்டி நடப்பா னாயினான்.

12. இப்பால் ஜீவகன் தன் மகளைப் பலதேவனுக்கு மணஞ் செய்வித்து இருவரையும் முனிவர் ஆச்சிரமம் அனுப்புவதே தகுதியெனத் தெளிந்தவாறே அச் செய்தினை மனோன்மணிக் கறிவிக்க அது அவள் செவிக்குக் காய்ச்சின நாராசம்போ லிருந்ததாயினும் தன் பிதாவுக்கு நேர்ந்த ஆபத் காலத்தை நன்குணர்ந்து அவனுக்கேற்றபடி நடந்து அவனைத் தேற்றுவதே தற்கால நிலைக்கேற்ற தனது கடமைப்பாடெனத் தெளிந்து அங்ஙனம் ஒப்புக்கொண்டது மன்றி, தன்பாடு எங்ஙனம் ஆயினும் தன்னைச் சர்ந்தவர் சுகத்தைப் பாராட்டும் பெருங்குணத்தால், காதல் கொண்டிருக்கும் வாணி, தன் கருத்திற் கிசைய நடராஜனை மணஞ் செய்து கொள்ளவும், நெடுங்காலமாகத் தன் குடும்ப ஊழியம் தலைக்கொண்டு நின்ற நாராயணன் செய்த தவறு யாதே யாயினும் அதனைப் பொறுத்து அவனைச் சிறை விடவும் தன் பிதாவினிடம் விரும்பிக் கேட்டுக் கொண்டனள். அப்படியே ஜீவகன் அனுமதி கொடுத்து அகமகிழ்ந்து மணவினைக் காயத்தம் செய்யவே, நடுநிசி சமீபிக்க முனிவரும் நடராஜனும் வந்து சேர்ந்தார்கள். தாம் போய் மீளுவதற்குள்ளாகக் குடிலன் செய்த துராலோசனையும் அதற்குடன்பட்ட மன்னவனுடைய ஏழைமையும் கருணா விலாசம் இருந்தமையும் கண்டு வியந்து அரசன் நிச்சயித்த வண்ணமே நடத்தச் சுந்தரர் இசைந்தார்.

13. கற்படைக் கருகில் உள்ள மணவறையை விவாக முகூர்த்தத்திற் கிசைந்தவாறு அலங்கரித்து, அதில் குடிலன் ஒழிய மற்ற மந்திரி பிரதானிகளுடன் முனிவர் ஜீவகன் நடராஜன் பலதேவன் நாராயணன் முதலிய அனைவரும் கூடிக் குடிலன் வரவிற்குச் சற்று எதிர்பார்த்திருந்தும் வரக் காணாமையால் மணவினைச் சடங்குகள் தொடங்கி, பலதேவனுக்கு மாலை சூட்ட மனோன்மணியை வர