பக்கம் எண் :

2மனோஹரன்[அங்கம்-1

சரணம்.

   தஞ்சமென் றுனைத்தாவி யடைந்தாரை
   அஞ்சலெனவே நீ ஆதரிப்பாயே
   பஞ்சையர் மீதும் பாவையர் மீதும்
   பாணத்தை நீ யென்றும் எய்யாதே.        (ம)

ஆயினும் ஒன்று கூறுகிறேன். உடலபிமானம், உயி ரபி
மானம், உற வபிமானம் இம்மூன்றையும் நீத்துப் போர்
புரியும் அமர்க்களத்தில், மானாபிமான மொன்றைமாத்திரம்
மறவாதே; என்ன இடுக்கண் வந்து நேர்ந்தபோதிலும்
அதர்ம யுத்தம் புரியாதே. பகைவரை வஞ்சித்துக்
கொல்லாதே. உனது ஜன்மத்துவேஷியா யிருந்தபோதிலும்
அமர்க்களத்தில் நிராயுதனாய் நின்றவன்மீதும்,
உன்னைத் தஞ்சமென் றடைந்தவன்மீதும், உனது
பாணத்தைச் செலுத்தாதே; அப்படிப்பட்டவர்களை
உனது உயிரையாவது கொடுத்துக் காப்பாற்று.

ம. அம்மா, அப்படியே ஆகட்டும் - இச்சிறந்த உடைவாளேது?

பத். உன்னிடம் இதைக் கொடுப்பதற்கே இதை எடுத்து
வைத்தேன் இன்றைத்தினம். இது யாருடையது தெரியுமா
உனக்கு? இது என் தந்தையாகிய அதிவீரசேர
மஹாராஜனுடையது. அவர் முத்துவிஜய பாண்டியனது
சூதால், தனது நாடு நகரமெல்லாம் இழந்து தெய்வா
தீனத்தால் இறக்கும்படி நேரிட்டபொழுது, தன்னால்
தன் பகையை முடிக்கக் கொடுத்துவைக்காமற் போன
போதிலும், தன் பேரனாகிய உன்னாலாவது தன் சபதம்
முடியவேண்டுமெனக் கருதி நீ குழந்தையாயிருந்தபொழுது
இவ் வாளை என்னிடங் கொடுத்து உனக்கு வயது
வந்தவுடன் இதை உன்னிடம் ஒப்புவிக்கும்படி கூறி,
தேகவியோக மடைந்தார். கண்ணே, மனோஹரா, உனது
மூதாதையினுடைய சபதத்தை நிறைவேற்றுவையா?