பக்கம் எண் :

காட்சி-1]மனோஹரன்3

ம.அம்மணி, அதை இன்னதென்று கூறும், ஒரு க்ஷணத்
தில் முடித்துவிடுகிறேன்.

பத்.அத் துஷ்டனாகிய முத்துவிஜயபாண்டியனது சென்னியை
இவ் வுடைவாளால் சேதித்து, அவன் நம்மிடமிருந்து
கவர்ந்த நாடு நகர முதலியவற்றையெல்லாம் மீட்கவேண்
டும்.கண்ணே, செய்வையா நீ இதை?

ம. அம்மணி, உமதருளாலும், தெய்வகடாட்சத்தினாலும்,
எனது புஜபல பராக்கிரமத்தினாலும் அப்படியே செய்
கிறேன் - இது சத்தியம்.

பத்.கண்ணே, இவ் வுடைவாளால் உனது பகைவரை யமனுல
குக்கேற்றி, உனது சபதத்தை நிறைவேற்றி, உனது கீர்த்
தியையும் புகழையும் நிலைபெறச் செய்து, சீக்கிரம் உனது
தந்தையும் நானும் மகிழும்படி வெற்றி வீரனாகத் திரும்பி
வருவாய்!

[பத்மாவதி உடைவாளை மனோ
  ஹரன் கையில் கொடுக்கிறாள்.
  அரண்மனைக்கு வெளியில் ஒரு
  ங்கு சேர்க்கப்பட்ட சைனியங்
  கள் "ஜெய! ஜெய" என்று
  கோஷிக்கின்றன.]

ரா.அம்மா, நற் சகுனமும் நமக்கு வாய்த்தது. இளவரசர்
அப்படியே வெற்றி பெற்று வருவார் என்பதற்குத்
தடையில்லை.

சத்.அதற்குச் சந்தேக மென்ன?

பத்.மனோஹரா, உனது பாட்டனாரும் முன்னோர்களும் உட்
கார்ந்து ராஜரீகம் செலுத்திய சிம்மாசனம் பாண்டியனது
சபையிலிருக்கிறது; அதையும் எப்படியாவது
மீட்டுக்கொண்டு வா. உனது பாட்டனார் அதை எனக்கு
ஸ்திரீதனமாகக் கொடுக்க எண்ணியிருந்தார்.

ம.அப்படியே ஆகட்டும், அம்மா, நான் விடை பெற்றுக்
கொள்ளுகிறேன் - நேரமாகிறது.

ரா.ஆமாம், அம்மா, படைகளெல்லாம் அணி வகுத்து நிற்
கின்றன. - புறப்படும், லக்னம் வந்துவிட்டது.