| பத். | கண்ணே, சுகமாய்ப் போய்வா. [மஞ்சத்தின்மீது சாய்ந்து விடுகிறாள்.]
|
| ம. | அப்பா! முக்காற் பாகம் தொந்திரவு தீர்ந்தது. இன்னும் காற்பாக மிருக்கிறது - [விஜயான் திரும்பி] விஜயா, நான் போய் வரவா ?
|
| வி. | [தன் கணவன் கரத்திற் சாய்ந்து] பிராணநாதா! பிராணநாதா [அழுகிறாள்.]
|
| பத். | விஜயா! இப்பொழுது நீ கண்ணீர் விடலாமா? உனது கணவனுக்கு ஒரு குறையும் வராது, சந்தோஷமாய் மங்கள வார்த்தை கூறியனுப்பு.
|
| வி. | பிராணநாதா! உம்மை நான் எப்படி விட்டுப் பிரிந்திருப் பேன்? எப்படிப்பட்ட வீரர்களும் மடியும் அமர் பூமியில் உம்மை நான் மனதொப்பி எப்படி யனுப்புவேன்.
|
| ராகம் - நாதநாமக்கிரியை, தாளம்- திரிபுடை. பல்லவி. ஐஐயோ! எப்படிப் பிரிவேன் என் பிராணநாதா உமைவிட்டு (ஐ)
அநுபல்லவி.
வையமீதி லுமைப்போல வாக்கை மறப்பாருளரோ. (ஐ) சரணம். நெஞ்சமதி லுமக் கென்மேல் கொஞ்சமேனு மிரக்க மிலையோ தஞ்சமாயுமை வஞ்சியடைய அஞ்ச லென்றே அறையீரோ. (ஐ)
|
| ம. | விஜயா, நீ யொன்றும் அஞ்சவேண்டாம். நான் மீண்டு வருமளவும் என் தாயார் உன்னைப் பார்த்துக்கொள் வார்கள்.
|