பக்கம் எண் :

காட்சி-1]மனோஹரன்5

வி. பிராணநாதா, நானும் உம்முடன் வருகிறேன்.

ம. ஐயோ, ஈதென்ன சங்கடம்! ஸ்திரீகள் யுத்த களத்திற்கு
வரலாகுமோ? இது அசாத்தியமான காரியம். நீ இங்குதானே
சுகமா யிரு. நான் போய்த் திரும்பி வருகிறேன் சீக்கிரம்.

வி. திரும்பி வருகிற சமாசாரம் என்னிடம் கூறுவானேன்?
அப்பொழுது யார் உயிருடன் இருக்கப் போகிறார்களோ
அவர்களிடம் கூறும்!

ம. அப்படியல்ல, விஜயா, மனோதைரியத்தைக் கைவிடாதே.
மனோஹரனுடைய மனைவியாயிருந்து நீ மன அதைரியப்
படலாமா? சீக்கிரம் எனக்கு விடையளிப்பாய்.
[முத்தமிட்டு] கண்ணே, நான் போய்வருகிறேன், - அம்மா,
விஜயாளை உம்மிடம் ஒப்புவித்துப் போகிறேன். அவளுக்கு
நீர்தான் தேறுதல் சொல்லவேண்டும்.

[விஜயாளின் கரத்தைப்பற்றி பத்
  மாவதியின் கரத்தில் வைக்கிறான்.
  வெளியில் யுத்த பேரிகை
  முழங்குகிறது.]

ரா. அம்மா; காலம் நெருங்கிவிட்டது சீக்கிரம் உத்தரவளியும்
எனக்கும்; தங்களுடைய ஆசீர்வாதத்தால் நானும்
உயிருடன் ஜெயம் பெற்று வரவேண்டும்.

பத். ராஜப்பிரியா, அப்படியே சுகமாய் வெற்றி பெற்று வா.
அப்பா, மனோஹரனைப் பார்த்துக்கொள்.

ம. அம்மணி, எனக்கு ஒரு துணை வேண்டுமோ?

பத். அவ்வாறன்று, யானைக்கு மடி சருக்குமென்பர். யுத்தத்தில்
சேம ரதனாக ஒரு ஆப்தன் எப்பொழுது மிருக்க
வேண்டும்.

                  [யுத்தபேரிகை மறுபடியும் முழங்கு
                    கிறது.]