| ம.
|
[தன்
தாயாரிடமும் விஜயாளிடமும் விடைபெற்று] நான் போய்
ஜெயித்து வருகிறேன்!
|
[மனோஹரன்,
ராஜப்பிரியன், சத்
தியசீலர் மூவரும் போகின்றனர்.
பத்மாவதி தன் முகத்தை
முன் தானையால் மூடி மஞ்சத்
தின்மீது சாய்ந்து விடுகிறாள்.
விஜயாள் தேம்பியழுது பத்
மாவதியின் மடியின்மீது வீழ்கிறாள்.]
|
|
|
காட்சி முடிகிறது.
இரண்டாவது காட்சி.
இடம்:-அரண்மனையில் வசந்தசேனையினுடைய அந்தரங்கமான அறை.
காலம்: - மாலை.
வசந்தசேனையும், நீலவேணியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
|
| வனை.
|
நீலவேணி,
அன்றைத்தினமே இவ்விஷயங்களையெல்லாம்
ஏன் என்னிடம் வந்து கூறவில்லை?
|
| நீ.
|
நான்
என்ன செய்வேன்? இந்த இரண்டு தினங்களும்
எனக்கு ஓயாது வேலை யிருந்தது அவ்வரண்மனையில்.
திடீரென்று வந்துவிட்டால் ஏதாவது என்மீது சந்தேகங்
கொள்ளமாட்டார்களா?
|
| வனை.
|
ஆம்
உன்மீதும் குற்றமில்லை; இப்பொழுதாவது வந்து
கூறினையே அம்மட்டும். சரிதான், நீ விரைவிற் சென்று
இன்னும் அங்கே என்ன நடக்கிறதென்று தெரிந்து அப்
போதைக் கப்போது என்னிடங் கூறிக்கொண்டிரு.
|
| நீ.
|
அப்படியே,
அம்மணி, அதை நான் மறப்பேனா? ஒரு
காலும் மறக்கமாட்டேன். - அம்மா, என்னுடைய தமயனார்
அமிர்தகேசரியைப்பற்றி முன்பே தங்களிடம் கூறி
யிருக்கிறேன், அவர் எப்படியாவது நம்முடைய ராஜ
குமாரருக்குக் கண்டிருக்கும் வியாதியைப் போக்கிவிடுவ
|