பக்கம் எண் :

காட்சி-2]மனோஹரன்7

தாகக் கூறுகிறார். எப்படியாவது தாங்கள் மஹாராஜா
விடங் கூறி அவரை நமது அரண்மனை வயித்தியராக
ஏற்றுக்கொள்ளும்படிச் சொல்லவேண்டும்.

வனை. அதற்கென்ன? அப்படியே ஆகட்டும், நீ போ; நான்
சொன்னபடி மாத்திரம் செய்.

நீ. அப்படியே, அம்மா; நான் பிறகு அழைத்து வருகிறேன்
அவரை.                           [போகிறாள்.]

வனை.

இதென்ன சங்கடம்! நான் பத்மாவதிக்குத் தீமை நினைத்
துச்செய்யுந் தொழில்களெல்லாம் அவளுக்குக் கடைசி
யில் நன்மையாய் முடிக்கின்றனவே! இப்பொழுது மனோஹரன்
வெற்றிவீரனாகத் திரும்புவானாயின் இதுவரையில்
நான் பட்டபாடெல்லாம் வீணுக்கு விழலுக்கு முத்
துலைக்கட்டி யிறைத்ததேயாகும். இம்மனோஹரன்
உயிருடனிருக்குமளவும் பத்மாவதியை நான் அசைக்க முடி
யாது. சீ! சீ! இனி நான் தாமதிக்கலாகாது. எப்படியாவது
மனோஹரனுடைய உயிருக்கு வழி தேடவேண்டும்.
மற்றவர்களெல்லாம் எனக்குச் சமான மானவர்களன்று.


பௌத்தாயனர் வருகிறார்.

 

பௌ. அம்மணி, நமஸ்காரம்.

வனை. வாரும் பௌத்தாயனரே- ஏதோ முக்கியமான சமா
சாரம் சொல்ல வந்தாற்போல் தோற்றுகிறது. என்ன
முகம் வெளுத்துக் காட்டுகிறது?

பௌ. வேறொன்றும் விசேஷமில்லை. மனோஹரர் நேற்றைத்
தினம் பாண்டியனது படைகளைச் சந்தித்து அவைகளை
நன்றாக முறி யடித்தபின்னர், பாண்டியனது பட்டணத்துக்குட்
பிரவேசித்து முத்து விஜயனைக் கொன்று பட்டணத்தையுங்
கைப்பற்றியதாகவும், சீக்கிரம் எல்லா வேலை
களையும் முடித்துக்கொண்டு திரும்பி வருவதாகவும்
செய்தி வந்தது மஹாராஜாவுக்கு.