பக்கம் எண் :

8மனோஹரன்[அங்கம்-1

வனை. பௌத்தாயனரே, நாம் நமது வசமாக்கி யனுப்பிய
இரண்டு படைவீரர்களும் என்ன வாயினர்?

பௌ. அதை மெல்ல விசாரித்தறிந்தேன். மனோஹரன் ஓர்
உதவியும் தனக்கு வேண்டாமென்று கூறி, முத்துவிஜய
பாண்டியனுடன் வாள் யுத்தம் புரியும்பொழுது, ஓர்
பக்கமாக இருந்து அவர்களிருவரும் மனோஹரன்மீது
பாணத்தை யெய்ய, அதை யெப்படியோ பார்த்துக்கொ
ண்டிருந்த ராஜப்பிரியன் அப்பாணத்தைத் தன் மார்பிற்
றாங்கித்தடுத்து, அவ்விருவரையுங் கொன்று விட்டானாம்!

வனை. ராஜப்பிரியனா? அவனுக்கு அவ்வளவு வீரம் எங்கிருந்து
வந்தது?

பௌ.

ராஜப்பிரியன் சமாசாரம் உங்களுக்குத் தெரியாது.
அவன் பயந்தவன்போல் நடிப்பதெல்லாம் அவ்வளவும்
வேஷம், அவனையும் சுத்தவீரனென்று நினையும். அவ
னில்லாதிருப்பானாயின் மனோஹரன் இதுவரையில்
இறந்து நமதெண்ணம் நிறைவேறி யிருக்கும்.

வனை. அவையெல்லா மிருக்கட்டும். மேல் நடக்கவேண்டிய
காரியத்தைப் பற்றி யோசிப்போம்- வேறு வழியில்லை! -
பௌத்தாயனரே, உமக்கு முதன் மந்திரியாகவேண்டு
மென்று உண்மையில் இச்சை இருக்கிறதோ?

பௌ. அம்மணி, அதை நான் தங்களிடம் பன்முறை கூறியிருக்
கிறேன். எல்லாம் தங்களுடைய சித்தம். தாம் மனது
வைத்தால் ஆகாமற்போமோ எக்காரியமும்? தாங்கள்
மஹாராஜாவிடம் ஒரு வார்த்தை கூறுவீராயின் அந்த
க்ஷணமுதல் நான் பிரதான மந்திரிதான்!

வனை. ஆனால் நான் உமக்கொரு கட்டளை யிடுகிறேன், அதன்
படி செய்கிறீரா?

பௌ. என்னாற் கூடுமானதானாற் செய்யத் தடையில்லை.

வனை. இந்த க்ஷணம் புறப்பட்டுப்போய்-மனோஹரனை-எப்
படியாவது-கொன்று-வருகிறீரா?