| பௌ.
|
அம்மணி!
அது அசாத்தியமான காரியம் எவ்வளவோ
இவ்விஷயங்களிற் கைதேர்ந்த அந்த இரண்டு வீரர்களால்
ஆகாமற்போன காரியம் என்னாலாகப்போகிறதா?
அவனைக் கொல்வது தவிர வேறேதாவது கட்டளையிடும்
செய்கிறேன்.
|
| வனை.
|
ஆனால்-
உடனே புறப்பட்டுப்போய் அவனிடத்திலிருக்கிற
உடைவாளை எப்படியாவது அபகரித்து வந்துவிடும்.
பிறகு செய்யவேண்டியவற்றை அப்புறம் கூறுகிறேன்.
மனோஹரன் இங்கு வருமுன் அவனது உடைவாளுடன்
நீர் வந்து சேரவேண்டும். இதாவது செய்வீரா?
|
| பௌ.
|
இது
சாத்தியமான காரியம். இதோ புறப்படுகிறேன்.
அம்மணி, தங்கள் தயவிருக்கவேண்டும். இப்பிரயத்னத்தில்
எனதுயிர் போனாலும் போகும். ஆயினும் உமக்காகத்
துணிகிறேன். ஞாபக மிருக்கவேண்டும்.
|
| வனை.
|
நீர் ஒன்றும் அஞ்சவேண்டாம். புறப்படும்
சீக்கிரம்.
எனக்குதவி செய்தவர்களை நான் ஒருகாலும் மறக்க
மாட்டேன்.
[தூரத்தில்
ஒரு கூச்சல் கேட்கிறது.]
பௌத்தாயனரே! அதென்ன சப்தம்?
|
| பௌ.
|
நான்
சென்று கேட்டுவரவா விரைவில்?
|
| வனை.
|
வேண்டாம்.
போகும்போது என்னவென்று விசாரித்து
யாரிடமாவதுகூறி இங்கனுப்பிவிட்டு, நீர் நேராக உம்
முடைய வேலையை நோக்கிச் செல்லும். ஒரு க்ஷணப்
பொழுதும் இனித்தாமதிப்பின் நம்முடைய காரியம்
சித்தி பெறாது, புறப்படும்.
|
| பௌ.
|
ராஜமகிஷி,
நான் பெரிய குடும்பமுடையவன், நான் இறப்
பேனாயின் என் குடும்பத்தைத் தாம் தான் காப்பாற்ற
வேண்டும்.-
|
| வனை.
|
ஒன்றும்
அஞ்சாதீர் நீர்போம். [பௌத்தாயனன் போகிறான்.]
ஐயோ பாவம்! மறுபடியும் இவனை நான் உயிருடன்
காண்பது அசாத்யம்! எனக்காக வீணில் எத்தனை
|