கடவுள் துணை. க ரு ணா மி ர் த சா க ர ம் . மு த ல் பு த் த க ம் . மு க வு ரை . அமுதமாய்ப் பெருகு மானந்தக் கடலாம் இதய மாஞ்சிறு குகைதனி லோர்பொறி உதித்த பிரணவத் தாலே யுருவாய் ஊமையா மெழுத்தா யோதொணா மறையாய் மனமெனு மாசான் வளர்கனல் மூட்ட உசுவாச நிசுவாசப் பெருங்காற் றுண்டாய் மந்தரத் தொனியாய் மனத்திடைத் தோன்றி மார்பு கண்டம் வரவரப் பருத்து மலர்நாசி நாக்கு மகிழுதடு தந்தம் தாடையா மைந்தின் திறத்தல் மூடல் விரிதல் குவிதல் வளைதல் நிமிர்தல் எனவிவ் வாறு தொழிலாற் பிறந்து பலபல தொனியாய்ப் பலபல வெழுத்தாய் நலந்தரு மறையாய் நாட்டிய கலையாய் பற்றிய சுவாலைப் படர்ந்தன கிளைத்துச் சுற்றிய தாலே சூடச மறிந்து ஓத முடியா வுயர்நாத மாச்சே.
|