நாலாவது அட்டவணை சதுரப்பாலையில் வரும் இராகங்களுக்கு ஆரோகணமும் அவரோகணமும். | நம்பர் | இராகங்கள். | ஆரோகணம் | அவரோகணம் | | 1 | மத்திமாவதி | ச ரி ம ப நி ச | ச நி ப ம ரி ச | | 2 | நாயகி | ச ரி ம ப த நி த ப ச | ச நி ச த ப ம ரி க ரி ச | | 3 | தேவகாந்தாரி | ச ரி ம ப த ச | ச நி த ப ம க ரி ச | | 4 | ஆரபி | ச ரி ம ப த ச | ச நி த ப ம க ரி ச | | 5 | பூரணச்சந்திரிகை | ச ரி க ம ப த ப ச | ச நி ப த ப ம க ம ரி ச | | 6 | ககனகுதுகலம் | ச ரி ம த நி க ப ச | ச நி த ப ம க ரி ச | | 7 | செஞ்சுருட்டித | ச ரி க ம ப த நி | த ப ம க ரி ச நி த ப | | 8 | நவரசகன்னடர் | ச க ம ப ச | ச நி த ம க ரி ச | | 9 | நாகஸ்வராளி | ச க ம ப த ச | ச த ப ம க ச | | 10 | ஹிமாங்கி | ச ரி க ம ப த நி த ச | ச நி ப த ம ரி ச | | 11 | கானடா | ச ரி க ம ப ம த நி ச | ச நி ப ம நி த ப ம க ம ரி ச |
ஐந்தாவது அட்டவணை சில தேசிக இராகங்களும் இந்துஸ்தானி இராகங்களும். ஆயப்பாலை முறைப்படி அரை அரையான பன்னிரு சுரங்களில் வழங்கிவருகிறதாக அட்டவணையில் காண்போம். ஆனால் ஆரோகணத்தில் எந்த சுரம் எத்தனை அலகுகளோடு வந்ததோ அதுபோலவே அவரோகணத்திலும் அந்த சுரம் அத்தனை அலகுகளோடேயே வர வேண்டு மென்பது மார்க்க விதியாம். இதில் ஆரோகணத்திலாவது அவரோகணத்திலாவது அல்லது இருவழியிலும் இரண்டொரு சுரங்கள் விடவும் அல்லது மாறிவரவும் செய்யலாம். ஆனால் எவ்விதத்திலும் அலகுகள் மாறிவரவே கூடாது. எப்படி என்றால் ஒரு ஆரோகண அவரோகணத்தில் வரவேண்டிய நாலலகு ரிஷபத்திற்குப் பதில் இரண்டலகாவது ஆறலகாவது வழங்கக் கூடாது. அப்படியே காந்தார மத்திம தைவத நிஷாதங்கள் இரண்டு விதம் வரக்கூடாது. இது மார்க்க விதிகளின்படி ஆகிய தென்னிந்தியா கானத்திற்குப் புற நடையாம். அதாவது தேசிகமாம். அல்லது முறை பிறழ்ந்ததென்று எண்ணப்படுகிறது. தித்திப்பு நிறைந்த பூந்திலாடு முதலியவைகளைச் சாப்பிடுகிற ஒருவன் உப்பில் ஊறிய மாவடுவையும் நாரத்தங்க காயையும் தொட்டுக் கொள்ளுவது போல் இதுவும் ஒரு சமயம் அழகாகத் தோன்றுமானாலும் இராகங்கள் தனித்துத் தனித்து மிக இன்பமுடையதாய் யானைகளையும் வசப்படுத்தும் வலிமையுடையதாய் நாக சர்ப்பங்களையும் படம் விரித்தாடச்
|