பக்கம் எண் :

890
கருணாமிர்த சாகரம் முதல் புஸ்தகம் - நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

செய்யும் செயலுடையதாய் விளங்கும் கர்நாடக சங்கீதத்தின் மார்க்க முறையை உடையதாகாதென்று நாம் துணிந்து சொல்லுவோம். ஆகையினால் இதைப்பற்றி அதிகம் எழுதவில்லை. தேசிக இராகங்களைப் பற்றி இதன் முன் முதல் பாகத்தில் சொல்லியிருப்பதே போதுமென்று நினைக்கிறேன். இராகங்களின் ஆரோகண அவரோகணங்களைப் பின்வரும் அட்டவணைகளில் காண்க.

நாலாவது அட்டவணை சதுரப்பாலை முறையில் கானடா என்ற இராகம் காந்தார நிஷாதம் நாலேமுக்கால் அலகில் வருகிறது என்று பார்த்தோம். அவ்விராகம் இந்துஸ்தானியாய்ப் பாடப்படும்பொழுது காந்தார நிஷாதங்கள் ஐந்தாவது ஐந்தாவது அலகாக மாறி வருகிறதோடு கூட நாலலகு காந்தாரமும் நிஷாதமும் கலந்து வருகின்றன. மற்ற சுரங்கள் யாவும் கர்நாடக சங்கீதத்தில் வரும் கானடாவைப்போலவேயிருக்கின்றன. இந்துஸ்தானி இராகங்களில் எனக்கு அதிகப் பழக்கமில்லாததால் அதிக இராகங்கள் இங்கே திஷ்டாந்தமாகக் காட்டக்கூடவில்லை.

ஐந்தாவது அட்டவணை தேசிக இராகங்களுக்கு
 ஆரோகணமும் அவரோகணமும்.

நம்பர்இராகங்கள்..ஆரோகணம்.அவரோகணம்.
1சாரங்காச ரி க ம ப த நி சச நி த ப ம ரி க ம ரி ச
2பியாக்ச க ம ப த நி சச நி த ப ம க ரி ச
3தேசிக கல்யாணிச ரி க ம ப த நி சச நி த ப ம க ரி ச
4காபிச ரி க ம ப நி சச த நி ப ம ரி க ம ரி ச
5பைரவிச ரி க ம ப த நி சச நி த ப ம க ரி ச
6ஆனந்த பைரவிச க ரி க ம ப த ப ச நி சச நி த ப ம க ரி ச
7காம்போதிச ரி க ம ப த சச நி த ப ம க ரி ச
8அடானாச ரி ம ப நி சச நி தா ப த நி த ப ம க ரி ச
9முகாரிச ரி ம ப த சச நி த ப ம க ரி ச

மேற்காட்டிய விதமாய் அட்டவணைகளில் கண்டபடியே இராகங்களை ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப்பாலை, சதுரப்பாலை முறையாகக் குறித்து அவற்றிற்கு ஆரோகண அவரோகண சுரங்களும் எழுதி வைப்போமானால் சுரங்களையும் நுட்பமான சுரங்களையும் பற்றி எவ்விதமான சந்தேகமும் பிற்காலத்தவருக்கு உண்டாகாது. தற்காலத்தில் கற்க விரும்பும் மாணாக்கர்களுக்கும் அது உபயோகமாயிருக்கும்.