பக்கம் எண் :

891
யாழில் சுரநிலை அறிவதற்குக் கணித முறை.

அரை அரையான ஆயப்பாலையின் பன்னிரண்டு சுரங்களைத் தவிர மற்றும் நுட்பமான சுரங்கள் யாவும் அவ்வவற்றிற்குரிய அளவோடு கமகமாய் அதாவது இழுத்து வாசிக்கப்பட வேண்டும். கமகமாய்ச் சுரங்கள் சொல்லப்படுவது நம்முடைய சாரீரத்தில் பேசுவது போல் இனிமையாயிருக்குமே யொழிய நுட்பமான சுரங்களுக்கு மெட்டுப்போட்டு வாசிப்பது கூடிய காரியமல்ல.

இதனால் யாழில் ஆயப்பாலையான அரை சுரங்களுக்கே நிலைவரமான மெட்டுப்போடப் பட வேண்டுமென்றும் மற்றும் நுட்பமான சுரங்கள் யாவும் கமகமாய்ச் சொல்லப்பட வேண்டுமென்றும் நாம் தெளிவாய் அறியவேண்டும்.

8. யாழில் சுரநிலை அறிவதற்குக் கணித முறை.

பூர்வ தமிழ்மக்கள் நீண்டகாலமாய் வழங்கிவந்த வாத்தியக் கருவிகளில் யாழும் குழலும் மிக முக்கியமானவை யென்று மிகத்தெளிவாக நாம் காண்கிறோம். இவை இரண்டும் மிக நுட்பமான சுருதிகளையும் சொல்லக்கூடிய இயல்புடையனவாயிருக்கின்றனவென்று நம் அனுபவத்தால் அறிவோம்.

இவைகளில் நுட்பமான சுரங்கள் இன்னவை யென்று சொல்வதற்குப் பதிலாக வட்டப்பாலை, திரிகோணப்பாலை, சதுரப்பாலை என்று வழங்கி வந்திருக்கிறார்கள். இம்முறை பழக்கத்தில் இல்லாமற் போனபின் இன்னபாலை இராக மென்று கண்டு பிடிக்க முடியாமல் வெகு சமீபகாலத்தில் 72 மேளக்கர்த்தாவின் கீழ்க் குறிக்கப்பட்டிருக்கிறதாக நாம் அறிய வேண்டும்.

அப்படிக் குறிக்கப் பட்டிருந்தாலும் போன்ற (1/4),(1/2),(3/4),1 அலகுகளினால் அவைகள் பேதப்பட்டிருக்கின்றன வென்று அட்டவணையால் தெளிவாய்த் தெரிகிறது. திஷ்டாந்தமாக நாலு சுருதி ரிஷபம் வரவேண்டிய தீரசங்கராபரணத்தில் 4(1/4) அலகுள்ள ஆரபியையும், 4(1/2) அலகுள்ள சங்கராபரணத்தையும் அம்சத்தொனியையும், 4(3/4) அலகுள்ள தேவகாந்தாரியையும் பாடுகிறோம். ஒன்றுமில்லாத இடத்தில் இப்படியாவது செய்து வைத்தார்களே யென்று சந்தோஷப்பட வேண்டியதாயிருக்கிறது.

யாழ், மனுடனுடைய சரீரத்தின் அளவின்படியும் அவனுடைய தத்துவங்களின் படியும் பிராணனின் இயக்கத்தின் அளவுப்படியும் அமைந்திருக்கிற தெனறு இதன் முன் சொல்லியிருக்கிறோம். உட்கார்ந்திருக்கும் ஒரு மனிதனின் உயரம் அவன் கைக்கு 4 சாணாயிருக்கிறது போல் யாழின் சுரஸ்தானங்கள் நிற்கும் இடமும் மேருமுதல் மெட்டுவரை அவரவர் கைக்கு 4 சாணா யிருக்கவேண்டும். அப்படி யில்லாதிருக்குமானால் யாழுக்குரிய நாதத்தின் எல்லாநயமும் தோற்றுவிக்க ஏது விருக்காது. ஆகையினால் யாழில் வரும் சுரங்களுக்கும் நுட்பமான சுரங்களுக்கும் ஒருவாறு அளவு சொல்ல வேண்டியது அவசிய மென்று எண்ணுகிறேன்.

இதில் நுட்பமான சுருதிகளுக்குரிய மெட்டுக்கள் வைத்து ஓசையைப் பரிக்ஷித்துப் பார்ப்பதற்கு தந்தத்தினால் அல்லது மூங்கிற்குச்சிகளினால் செய்த மெட்டுக்களைப் பற்றி 851-ம் பக்கத்தி்ல் சொல்லியிருப்பதினால் மெட்டுக்களின் ஸ்தானங்களைப் பற்றி மாத்திரம் கணக்குச் சொல்லி அவைகளில் 32 அங்குல நீளமுள்ள ஒரு யாழுக்குப் பரிக்ஷித்துப் பார்க்கக் கூடிய அளவு அட்டவணையும் கொடுத்தால் போதுமென்று எண்ணுகிறேன்.