மேருவிலும் மெட்டிலும் எங்கே தந்தி படுகிறதோ அந்த இடம் வரையும் நுட்பமாக அளந்து எடுத்துக்கொள்ளவேண்டும். அப்படி யில்லாமற்போனால் (1/8) அல்லது (1/16) சுரம் கூடுதலாகப்பேசும். திஷ்டாந்தமாக மழை காலத்தில் மரச்சாமான்கள் ஈரத்தினால் உப்புவதும் வெயில் காலத்தில் சுருங்குவதும் நம் அனுபவத்தில் காண்போம். வீணையின் மேற்பலகை உப்பும் பொழுது இனிமையாய்த் தந்திகள் பேசுவதற்காக மெட்டில் பதிக்கப் பட்ட பித்தளை ரேக்குத் தகடுகளுக்கும் தந்திக்கும் நடுவில் சாய்வாக கால் அல்லது காலேயரைக்கால் அங்குலம் இடைவெளி வைப்பது வழக்கம். வீணையின் மேற்பலகை உப்பும் பொழுது வீசம் அல்லது அரைக்கால் அங்குல இடைவெளி குறைந்து தந்தியோடு பொருந்தும். அப்படிப் பொருந்துவதனால் மொத்தத் தந்தியின் நீளம் குறைந்து சுரஸ்தானங்கள் யாவும் கூடுதலாகப் பேசும். வெயில் காலத்தில்வீணையின் மேற்பலகை தொய்வு கொடுக்க இடைவெளி கூடுதலாகிச் சுரஸ்தானங்கள் யாவும் குறைந்து காட்டும். இப்படி இருப்பதினால் கோடை காலத்திலும் மாரி காலத்திலும் சொற்ப திருத்தம் செய்ய வேண்டியது வரும். இது யாழ் வாசிப்பவர்கள் அறிந்த உண்மை. இதனால் தந்தியின் அளவு நுட்பமாய் அளந்து எடுக்கும்படி கவனிக்க வேண்டியது. இவ்வளவோடு எடுத்துக் கொண்ட யாழில் மேளம் செய்வதற்கு மெழுகு வைத்து மட்டம் செய்து புத்தகத்தில் கொடுத்திருக்கும் அளவை 16 அங்குல நீளமுள்ளஒரு வெள்ளைக் கடுதாசியில் அட்டவணையில் குறித்த அளவில் வைத்து அணு அளவும் தவறாமல் மெல்லிய கோட்டினால் சுரஸ்தானங்களைக் குறித்துக் கொள்ள வேண்டும். அதன் பின் கடுதாசியில் குறித்த அளவின் படியே யாழின் மெழுகில் குறித்து, குறித்த இடத்திற்கு நேராக கூருள்ள மெட்டின் மேற் பாகம் வரும்படி மெட்டுக்கள் பதிக்கப்பட வேண்டும். கடுதாசியில் குறித்த அளவையும் மெட்டுக்கள் நிற்கும் அளவையும் அடிக்கடி ஒத்துப்பார்த்து சரியாயிருக்கும்படி செய்து கொள்ள வேண்டும். சுர ஞானமுள்ளவர்கள் சுலபமாய்ச் செய்கிறதா யிருந்தாலும் இராகங்களில் வரும் சுரங்களைப் பாடிப்பார்த்து மெட்டிலும் சரியான சுரஸ்தானங்கள் கண்டு பிடிப்பதற்குச் சில நாள்கள் செல்லும். சில சுரங்கள் அப்போதுங் கூட கொஞ்சம் முன் பின்னாயிருக்கும். ஆனால் இவ்வளவின்படியோ யாழுக்கு மெழுகு வைத்த ஒரு மணி நேரத்திற்குள் சரியாக வைத்துக் கொள்ளலாம். இதனால் சுரஞானத்தைக் கொண்டு "குரல் இளி என்றிரு நரம்பின் ஒப்பக்கேட்கும் உணர் வினனாகி" என்ற பூர்வதமிழ் மக்கள் வாக்கியத்தின்படி ச ப முறையாய்ச் சுரங்கள் வைக்கக்கூடா தென்பது கருத்தல்ல. ச-ப(2/3), ச-ம(3/4) என்ற ஒரு மோட்டா அளவினால் சுரஸ்தானங்கள் கண்டு பிடித்து அதற்குரிய வைபரேஷனைச் சொல்லி வாதாடும் இக்காலத்தில் 2/3என்ற அளவினால் ஒருஸ்தாயி மிச்சமில்லாமல் முடிகிறதில்லை. அதைப் பார்க்கிலும் நுட்பமானகணித முறையினால் திட்டமான சுரஸ்தானங்களும் நுட்பமான சுருதிகளும் கிடைக்கின்றனவென்று நாம் யாவரும் அறிந்து கொள்வதற்காகவே இக்கணிதமுறையும் அட்டவணையும் காட்டப்பட்டன. முதுகெலும்பில்லாத பிராணிகள் எப்படி பலமற்றவைகளாயிருக்கின்றனவோ அப்படியே கணிதமில்லாத சாஸ்திரங்களும் அனுபோகங்களுமிருக்கின்றன. அனுபோகத்திற்குவந்த தொழில்கள் பொது விதிகளினாலும் அவைகளுக்குரிய கணக்குகளினாலும் குறிக்கப்படாமல் போனால் அவைகள் உலகத்தில் நிலைத்திருக்க மாட்டா. பூர்வ தமிழ்மக்கள் சங்கீதத்தில் மிகத் தேர்ச்சி யுடையவர்களாயிருந்த தினிமித்தம் தங்களுக்குத் தெரிந்தபடியே பின் வருபவர்களும்
|