திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேவாரப்பணிவிடை மகா- - -ஸ்ரீ சாலிவாடீசுர ஓதுவா மூர்த்திகளின் பரம்பரை மகா- - -ஸ்ரீ சண்முக சுந்தர ஓதுவாமூர்த்திகளின் அபிப்பிராயம். தஞ்சாவூர் ராவ்சாயப் ஆபிரகாம்பண்டிதரவர்கள் இயற்றிய “கருணாமிருத சாகரம்” என்னும் நூலின் முதற்பாகத்தைப் பார்வையிட்டேன். அதில் இனிய தமிழின் பழமையான மூன்று சங்கங்களின் வரலாறுகளும் விரிவாய் விளக்கப்பட்டிருக்கின்றது. இயல், இசை நாடகமென்னு முத்தமிழில் இசைத்தமிழின் ஏழிசைகளையும் அவற்றிற்காதாரமாய் விளங்கும் இருபத்து நான்கு சுருதிகளையும், “பரிபாடல்கள்” சிலப்பதிகாரம் முதலிய சங்கநூல்களின் மேற்கோள்களைக் கொண்டு விளக்கி மற்றபாடையிற் கூறும் இருபத்திரண்டு சுருதிகள் நியாயத்திற்கும் அளவுப்பிரமாணங்களுக்கும் அனுபவத்திற்கும் ஒவ்வாமையை நன்கெடுத்துக் கூறப்பட்டிருக்கின்றது. அன்றியும் தமிழ்வேதமென்னுந் தேவாரத்திருமுறையின் பண்களின் முறைகளையும் அவைகளை யோதவேண்டிய பாரம்பரியக்கிரமத்தையும் விளக்கப்பட்டுள்ளது. இந்நூல் இசைநூற்பயிற்சி செய்ய விரும்புவோர் அனைவருக்கும் மிக்கபயன் படுவதுடன் இந்தியா தேசத்தில் 12000 வருடங்களுக்கு முன் சங்கீத மிருந்த வுயர்நிலைமையுந் தெளிவுறுத்துகின்றது. ஆதலா லிந்நூலறிஞர்களனைவராலும் பாராட்டத் தக்கதே. ************ Remarks of Mr. A. G. PICHAIMUTTHU, B.A., L.T., Headmaster, S. Peter’s High School, Organist, S. Peter’s, and Honorary Secretary to the Sangeetha Vidya Mahajana Sangam, Tanjore. ------------------- It has been said against Indians that they generally lack originality and application. But this statement has been given the lie by the voluminous treatise on Indian Music, ‘Karunamirtasagaram’ written by Rao Sahib M. A. Pandither of Tanjore, S. India. Music is a technical in character. Those who are credited with a practical knowledge of it at the present day are those musicians who make it their means of livelihood, and most of these are utter strangers to the science of it. It is, therefore, a matter for extreme gratification that the author has combined in himself a complete knowledge of the Science and Art of Music, and has published this great work as the result of his disinterested labours.
|