பக்கம் எண் :

923
தென்னிந்திய சங்கீதத்தைச் சுலபமாய்ப் பாடுவதற்கு ஸ்டாப் நொட்டேஷனில் குறிக்கும் முறை

மேற்காட்டிய நாலு உதாரணங்களில் முதலாவது ஆயப்பாலை இராகமாம். இதில் நாம் கவனிக்கவேண்டியது அரை அரையாக ஒருஸ்தாயியில் பன்னிரண்டு சுரங்களாக வழங்கும் ஆயப்பாலை மேற்றிசை சங்கீதத்திற்குரிய ஸ்டாப் நொட்டேஷனைப் போலவே வருகிறது என்பதே. இப்படிப்பட்ட இராகங்களை ஸ்டாப் நொட்டேஷனில் குறித்துக்கொள்ளுவதும் திரும்ப வாசிப்பதும் எவ்விதமான சங்கடமுமில்லாமல் மிகச் சுலபமாய் யாவரும் படித்துக் கொள்ளக்கூடியதே. இதோடு ஆயப்பாலையாய் வரும் இராகங்களில் மிகச் சுலபமான கீர்த்தனங்களுக்கும் சுரஜதிகளுக்கும் நாலு பார்ட்ஸ்கள் (parts) சேர்த்து வாசிப்பது கூடியதும் இனிமையுமானதே.

இரண்டாவது உதாரணமாக வட்டப்பாலைக்குக் கொடுத்திருக்கும் கைகவசி இராகத்தில் மூன்றாவது அங்கத்தில் (bar) வரும் நிஷாதத்தின் மேல் நாலு என்றும் ஆறாவது அங்கத்தில் வரும் மத்திமத்தின்மேல் நாலு என்றும் ஒன்பதாவது அங்கத்திலும் பத்தாவது அங்கத்திலும் வரும் மத்திமத்தின் மேல் நாலு என்றும் பதினொன்றாவது அங்கத்தில் வரும் விஷாதத்தின் மேல் நாலு என்றும் போட்டிருக்கிறதை நாம் காண்போம். இவ்விலக்கங்களைப்பற்றி முன்னே நாம் எழுதியிருக்கிறோம். என்றாலும் இது தெளிவாய் அறிந்துகொள்வதற்கு இன்னும் ஒரு முறை பார்ப்போம்.

அதாவது ஆயப்பாலையின் ஒரு அரை சுரத்தை அல்லது இரண்டு அலகை அடியில் வருகிறபடி எட்டாகப் பிரித்து அதில் 1/4,1/2,3,4 அலகுகளாக கால் காலாய் வரும் அலகுகளை 1, 2, 3 என்று வைத்துக்கொண்டு குறித்துக் கணக்கிடுவோம்.

ஆயப்பாலையின் அரைச்சுரம் ஒன்று 8 பங்கு செய்யப்பட்டுக் காட்டப்பட்டிருக்கிறது.

ஸ்டாப் நொட்டேஷனில் சுருதி குறிக்கும் முறை.

    

  

 2

 3  

4

 

5

 

6

 

7

 
                          

ம 4

                           
                         

  

    

41/2

 

 41/2

 

 43/4

  5 

51/4

 

51/2

  53/4    

இதில் வரும் நாலலகுள்ள மத்திமத்தை பிரதி மத்திமமென்று தற்காலத்தில் வழங்குகிறோம். நாலலகுள்ள மத்திமத்திலிருந்து பஞ்சமம் வரை ஒரு இராசியாகவும் இரண்டு அலகாகவும் பூர்வத்தோர் கணக்கிட்டிருக்கிறார்கள். நாலலகுள்ள பிரதி மத்திமத்திற்கும் பஞ்சமத்திற்கும் நடுவில் ஐந்து அலகுள்ள மத்திமம் வருகிறது. அது 41/4, 41/2, 43/4, 5, 51/4, 51/2 , 53/4 என்று கால் கால் அலகுகளாகச் சேர்ந்து பங்சமத்தில் முடிகிறது. இதை 1/4,1/,2,3/4 என்று போடுவதைப் பார்க்கிலும் 1, 2, 3, 4 என்று ஸ்டாப் நொட்டேஷன் மேல் குறித்துக்கொள்வது சுலபம் என்று தோன்றுகிறது,

நாலு என்று சொல்லும்பொழுது1/4x 4 = 1 அதாவது நாலலகுள்ள மத்திமத்தோடு ஒரு அலகு சேர்ந்து ஐந்தாவது அலகில் வருகிறது என்று தெளிவாகக் காண்கிறோம். ஒரு சுரத்திற்கு மேல் 2 என்று போட்டிருக்குமானால் 1/4 x 2 = 1/2 அலகு சேர்ந்தும் 3 என்று போட்டிருக்குமானால் 1/4 x 3 = 3/4 அலகு சேர்ந்தும் வருகிறதென்று அறிய வேண்டும். 6 என்று போட்டிருக்குமானால் 1/4 x 6 = 11/2 அலகு சேர்ந்து வருகிறதென்றும் ஒன்று போட்டிருக்குமானால் 1/4 x 1 = 1/4 சுருதி சேர்ந்து வருகிறதென்றும் 7 போட்டிருக்குமானால் 1/4 x 7 = 1 3/4 சுருதி சேர்ந்து வருகிறதென்றும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.