பக்கம் எண் :

107

தஞ்சை, சென்ற் பீற்றர்ஸ் ஹைஸ்கூல் ஹெட்மாஸ்டரும் சென்ற் பீற்றர்ஸ்
சர்ச் ஆர்கனிஸ்றுமான Mr. A. G. பிச்சமுத்து B. A., L. T.,
அவர்களின் அபிப்பிராயம்.

இந்தியர்கள் புதிதான ஒரு காரியத்தைச் செய்வதிலாவது அதற்கென்று பிரயாசப்படுவதிலாவது ஏலாதவர்கள் என்று அவர்கள்மேல் சாதாரணமாய்க் குறை கூறுவதுண்டு. ஆனால் தஞ்சை, Rao Sahib M. A. பண்டிதரவர்கள் இயற்றிய கருணாமிர்தசாகரம் என்ற இந்தப்பெரிய இசைத்தமிழ் நூலைப்பார்ப்பவர்க்கு அப்படிச் சொல்லுவதானது பொய்யென்று விளங்கும். சங்கீதம் அருமையான சாஸ்திரமானதால் மற்ற சாஸ்திரங்களில் தேர்ந்த நிபுணருங்கூட சங்கீதமென்றால் விலகிவிடுவார்கள். தற்காலம் அந்த வித்தையில் தேர்ந்தவர்கள் என்ற எண்ணப்படும் வித்வான்களுங்கூட அதை வயிற்றுப்பிழைப்பிற்காக உபயோகிப்பதால் அவர்களில் பெரும்பான்மையோருக்கு சாஸ்திர விஷயம் கிஞ்சித்தேனும் தெரியாது. காரியங்கள் தற்காலம் இந்நிலைமையிலிருக்கையில், நம்முடைய நூலாசிரியர் சங்கீத சாஸ்திரத்திலும் அதை அனுபோகமாய் உபயோகிக்கும் முறையிலும் நிபுணராயிருக்கிறார் என்று இந்த நூலினால் வெளியாவது மல்லாமல், யாதொரு பிரதி உபகாரத்தை எண்ணி இதைச் செய்யவில்லை யென்றும் தெரிகிறபோது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியுண்டாகிறது.

இந்தப் பெருநூலை எழுதுவதில் இந்நூலாசிரியர் 15 வருஷம் இடைவிடாமல் உழைத்திருக்கிறார்கள். இந்நூலானது தென்னிந்திய சங்கீதத்தைப்பற்றி நேராய்ச்சொல்லுவதோடுகூட, தென் னிந்திய சரித்திரத்தையும் அதன் பூர்வ நூல்களையும் பற்றி பெருக்கமாய்ப் பேசுவதுமல்லாமல் விசேஷமாய்த் தமிழ் நாட்டின் சரித்திரத்தையும் யாவருக்கும் நன்கு விளங்கும்படி எடுத்துச்சொல்லுகிறது. ஏனென்றால் தமிழ் நாட்டின் நூல்களையும் சங்கீதத்தையும் பிரித்துச் சொல்லுதல் கூடாத காரியமன்றோ? முதல் தொடங்கி புத்தகத்தின் கடைசிவரை சொல்லப்பட்டிருக்கும் புதிது புதிதான விஷயங்களையும், விஷயங்களை ஸ்தாபிப்பதில் நூலாசிரியர் உபயோகித்திருக்கும் கணக்கில்லாத மேற்கோள்களையும், அபிப்பிராயங்களை மனதில் படும்படி சொல்லுகிற விஷயத்தில் உபயோகித்திருக்கும் ஏராளமான உபமானங்களையும், அநேக சாஸ்திரங்களில் நூலாசிரியர் அடைந்திருக்கும் பாண்டித்தியத்தையும், இடைக்கிடையே மனக்கிளர்ச்சியை யுண்டுபண்ணும் படிக்காக அவர்கள் உபயோகித்திருக்கும் ஏராளமான உபமானங்களையும், அநேக சாஸ்திரங்களில் நூலாசிரியர் அடைந்திருக்கும் பாண்டித்தியத்தையும், இடைக்கிடையே மனக்கிளர்ச்சியை யுண்டுபண்ணும் படிக்காக அவர்கள் உபயோகித்திருக்கும் சிலேடைப்பிரயோகங்களையும் (அவையல்லாவிட்டால் புஸ்தகம் படிக்கக்கஷ்டமாயிருக்குமே), சற்றும் பயமின்றித் தன்னுடைய சுருதி அபிப்பிராயத்தை முற்றிலும் சரியாக ஸ்தாபிக்கும் மேரையையும் நாம் நோக்கும்போது, நூலாசிரியருடைய ஆச்சரியப்படத்தக்க பாண்டித் தியம் நன்கு விளங்கும். இந்நூலை வாசிப்பவர்கள் அங்கங்கே சில காரியங்களைத் திரும்பத்திரும்பச் சொல்லி யிருப்பதைக் காணலாம். ஆனால் நூலாசிரியர் வேண்டுமென்றே அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். அப்படிச்சொன்னால்தான் காரியங்கள் நன்றாய் மனதிற்குப்புலப்படும் என்பதற்காகவே அப்படிச் சொல்லப் பட்டிருக்கிறது. இவைகளை யெல்லாம் நாம் கவனிக்கும்போது தற்கால நூலாசிரியருள் இவர்களுக்கும் ஒரு பெருமையான இடம் கிடைக்கவேண்டியது என்று சந்தேகமறச்சொல்லலாம்.

நூலாசிரியரின் முக்கிய நோக்கம் பூர்வதமிழரின் கானம் இன்னது என்று எடுத்துச் சொல்வதும், தற்கால கர்நாடகசங்கீதத்திற்கும் அதற்குமுள்ள ஒற்றுமையை ஸ்தாபிப்பதும் தான். இதுவிஷயத்தை ஆச்சரியப் படத்தக்க விதமாய்ச் சரிவர செய்து முடித்திருக்கிறார்கள். ஆதித்தென்னிந்திய சங்கீதத்தில் ஒரு ஸ்தாயி எப்படி சமமான இடைவெளிகளுள்ள சுருதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததென்று பூர்வ தமிழ் நூல்களின் தகுதியான மேற்கோள்களைக்கொண்டு வெகு ஜாக்கிரதையுடன் ஸ்தாபிக்கிறார்கள். இதுதான் அவர்களுடைய முறைக்கு ஆதார அபிப்பிராயம். இதை ஸ்தாபிக்கும் விஷயத்தில் அவர்களுக்கு அகப்பட்ட பெரிய ஆதாரம் ஏதென்றால் சங்கீத சாஸ்திரத்தைச் சமஸ்கிருத பாஷையில் எழுதினவரும், யாவராலும் பெரிய சங்கீத நூலாசிரியரென்று ஒப்புக்கொள்ளப்படுபவருமான காஷ்மீர் தேசத்தைச் சேர்ந்த சாரங்கதேவர்தான். இவர் 13-ம் நூற்றாண்டில் இருந்தவர். சுருதி விஷயமாய் இவர் சொல்லுவதென்னவென்றால், ஒரு ஸ்தாயியிலுள்ள சுரங்கள் ஒன்றற் கொன்று தீவிரமாய் படிப்படியாய் ஒரு ஏணியின் பழுக்களைப்போல சம அளவுள்ளவைகளாய் நடுவில் வேறு சுரங்கள் வர இடமில்லாமல் ஒழுங்கானவையாயிருக்கவேண்டும் என்பதே. இதற்கிசைந்தே நம்முடைய நூலாசிரியரும்