ஒரு ஸ்தாயியை 12, 24, 48, 96 சமபாகங்களாகப் பிரிக்கிறார்கள். சுரங்கள் எல்லாம் ஒழுங்காய் ஒன்றற் கொன்று தீவிரமாய் Geometrical Progression இல் அமைகின்றன. இந்த அபிப்பிராயத்தை ஸ்தாபிப் பதில் நுட்பமான கணக்குகளும் லாகிரிதமும், எட்டுஸ்தானம் வரை தசாம்ஸ பின்னங்களும், தந்தியின் நீளமும், ஓசை அலைகள் சென்ட்ஸ்களின் கணக்குகளும் கொடுக்கப்பட்டிருப்பது மாத்திரமல்ல, அவைகள் முற்றிலும் சரியென்று பாடியும் வீணை முதலிய வாத்தியங்களில் வாசித்து ருசுப்படுத்தியிருக்கிறார்கள். புஸ்தகத்தைக் கவனமாய் வாசிக்கும் எவரும் அவர்கள் அபிப்பிராயம் அனுபோகத்திற்கு ஒத்திருக்கிறது என்பதைப் புஸ்தகத்தி லிருந்தே எளிதில் கண்டுகொள்வார்கள். ஆனால் அவர்கள் செய்து காட்டிய ருசுவை நேரில் பார்த்தவர் களுக்கு அந்த முறையின் உண்மையும் அதைவிட வேறுவிதமான முறையெங்கும் அகப்படாது என்ற சத்திய மும் உடனே மனதில் உதிக்கும். எந்த இந்திய சாதாரண சங்கீத வித்வானும், ஒரு ஸ்தாயி 12 சம பாகங்களாகப் பிரிக்கப்படுகிறதென்றும், கணக்கில்லாத இந்திய இராகங்கள் இந்த 12 சுரங்களிலேயே பாடப்படு கின்றனவென்றும், கிரகமாற்றும்பொழுது இந்த 12 சுரங்களிலிருந்து வெவ்வேறு இராகங்கள் ஜனிக்கின்றன என்றும் தடையில்லாமல் ஒப்புக்கொள்வான். இந்திய சங்கீதம் ஒழுங்கற்ற இடைவெளிகளுள்ள சுரங்களாலானது என்று சொல்லும் எந்த முறையையும் அடியோடே வெட்டிச் சாய்ப்பதற்கு இந்த ஒரு விஷயமே போதும். ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகளுண்டு என்று சாதிக்கும் கொள்கைக்காரரை மறுக்கிறார் நூலாசிரியர். சாரங்கதேவர் சொல்லுவதின் கருத்தை மற்றவர் தப்பாய் அர்த்தம் பண்ணினார்களென்று போதுமான நியாயங் காட்டிச் சொல்லுகிறார். பூர்வ இந்தியாவில் 24 சுருதிகளில் 22 சுருதியில் தமிழர் கானம் பண்ணினார்கள் என்ற அபிப்பிராயமும் இதோடே சேர்ந்தவுடனே பெரிய குழப்பமாய் முடிந்தது. துவாவிம்சதி சுருதிக்காரரில் சில வித்வான்களையும் அவர்களுடைய சுருதிகளையும் வாத்தியங்களையும் என் முன் நேரில் பார்க்க விரும்புகிறேன். உடனே அவர்களுடைய வெட்டவெளிச்சமெல்லாம் தெரிந்து விடும். அவர்களுடைய சுரஸ்தானங்களைப்பற்றி இரண்டு பேர்கூட ஒற்றுமையான அபிப்பிராயம் சொல்ல மாட்டார்கள். தர்க்கம்பண்ண ஆரம்பித்துவிட்டாலோ இரண்டு நிமிஷத்திற்குள் ஒருவர் கழுத்தை யொருவர் அறுத்துக்கொள்வார்கள். நான் சொல்லுவது நிஜமோ தப்போ என்று அறியவேண்டுமென்று விரும்புகிறவர்கள் கருணாமிர்த சாகரம் 491 - 494 ஆம் பக்கத்தைப் பார்க்கலாம். சட்ஜமத்தையும் மேல் சட்ஜமத்தையும் தவிர மற்ற எந்தச் சுரங்களிலாவது ஒருவருக்கொருவர் ஒற்றுமையில்லையென்று அங்கே தெளிவாகக் காண்போம். சங்கீதந் தெரியாதவர்கள் 22 சுருதிக்கும் 24 சுருதிக்கும் அதிக வித்தியாசமில்லையென்று நினைப்பார்கள். அது தப்பு இரண்டு சுரவரிசைகளுக்கும் கொஞ்சமாவது சம்பந்தமில்லை. பூர்வ கர்நாடக இராகங்களும் தற்காலம் உபயோகத்திலிருக்கும் கர்நாடக இராகங்களும் பாடப்படுவது 24 சுருதிகளில் தான். 22 சுருதிகள் அந்தக் கொள்கைக்காரரின் மனதில் மாத்திரம்தான் இருக்கிறது. உண்மையாகவே அவைகள் வேறெங்கும் இல்லை. சங்கீத வித்வான்கள் பாடுவதெல்லாம் 24 சுருதிகளில்தான். ஆனால் அவைகளில் பாடுகிறோமென்று அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் பாடும் சுருதிகளை ஆராய்ந்து பார்ப்பார்களானால் தாங்கள் சாதிப்பது ஒன்று பாடுவது வேறொன்று என்று அறிவார்கள். சப்தசுரங்கள், ஸ்தாயிக்கு 12 சுரங்கள், அவைகளில் உண்டாகும் தாய் இராகங்கள், கிரகமாறுதல் உண்டு என்னும் முக்கியமான சங்கதிகளை ஒப்புக்கொள்வார்களானால் - பெரும்பான்மையோர் ஒப்புக்கொள்வதும் வாஸ்தவம் - 22 சுருதிகள் என்ற சுருதிக்கொள்கை எங்கும் இராது. இந்தக் கொள்கைக்காரர், அவர்களுடைய காப்டனாகிய கிளமெண்ட்ஸ் துரையுள்பட, ச-ப, ச-ப வாக (2/3),(2/3) ஆகப் போவதினால் தங்களுடைய ஆர்மோனிக் சுரஸ்தானங்கள் கிடைக்கின்றன என்று சாதிக்கிறார்கள். ஆனால் உண்மையைச் சொல்லவேண்டுமானால் இப்படி இரண்டடி தூரம் போவார்களானால் அவர்கள் எல்லாரும் திடீரெனக்குழியில் விழுவார்கள் ஸ்தாயியின் முடிவைக் காணமாட்டார்கள். தலையிலும் பக்கத்திலும் புள்ளியோடு திரும்பத்திரும்ப வரும் தசாம்சபின்னமாகிய (2/3) எப்படி முடிவுக்கு வரும்? இங்கிலீஷ் சங்கீதம் தெரிந்தவர்கள், ஐந்துஐந்தாகச் சுரங்களைக் கண்டுபிடித்துக் கொண்டுபோகும்போது சிற்சில குறைத்து வைக்காமல்
|