மத்தியஸ்தாயி சட்சமும் தாரஸ்தாயி சட்சமு மிருக்கின்றன. மந்த சமஉச்ச மென்னும் மூவகை இயக்கிலும் ஒன்று, இரண்டு, நாலாகப் பெருத்திருக்கிறதே யொழிய வேறல்ல. காற்படி அரைப்படி யுள்ளும், அரைப்படி ஒருபடியுள்ளும் அடங்குகிறது எப்படியோ அப்படியே ஒன்றற்கொன்று மிச்சமில்லாமல் படிப்படியாய் உயர்ந்து நாதம் ஒன்று பட்டுப் பொருந்தி நிற்கும். இப்படிப் பொருந்திநிற்காமல் போனால் ஒரு ஸ்தாயி சரியாய் முடிந்ததாக எண்ணப்படமாட்டாது. ஒரு வீணைத்தந்தியை இரண்டு சமபாகமாக அளந்து பிரித்தால் பிரிக்குமிடத்தில் ஒரு சட்சமிருக்கிறது. முழுத் தந்தியிலுள்ள ஓசையும் இரண்டாகப் பிரித்த இடத்தில் வரும் ஓசையும் மிகப் பொருந்தி நிற்கும். இவ்விரண்டு சுரங்களும் பொருந்தாமற் போனால் எட்டாவது சுரம் சரியானதல்ல. இவ்வெட்டாவது சுரத்திற்குள்ளாக வரும் இடம் ஒரு ஸ்தாயி என்று சொல்லப்படுகிறது. இனிமேல் ச-ப, ச-ப முறையாய் அல்லது ஐந்தாவது சுரமாய் (ச ரி2 க3 ம4 ப5) அதாவது பூர்வ தமிழ் முறைப்படி இணை கிளையாய் அல்லது ஏழாவது ஏழாவது ஐந்தாவது ஐந்தாவது இராசியாயும் கண்டுபிடித்துக் கொண்டுபோகப் பன்னிரு சுரங்களும் வருகின்றன.்பைதாகோரஸ் ச-ப2/3 என்றுசொல்வதையும் பாரிஜாதக்காரர் தந்தியின் 1/3 ல் பஞ்சமம் இருக்கிறதென்று சொல்வதையுங் கொண்டு (2/3)x(2/3) ஆகக் கண்டு பிடித்துக் கொண்டு போவாமானால் அது பன்னிரண்டாவது தடவையில் ஒரு ஸ்தாயிக்கு மேற்பட்டுப்போகிறதை இதன் முன் கணக்கில் பார்த்திருக்கிறோம். ஆகையினால் தந்தியை மூன்றில் ஒன்றாகப் பிரித்து அந்த அளவின்படியே 12 சுரங்களைக் கண்டுபிடிக்கவேண்டாம். அது ஒரு ஸ்தாயியில் முடிவடையாது. ஆகையினால் ஒவ்வொரு தடவையிலும் கொஞ்சம் கொஞ்சம் குறைத்து ஒரு ஸ்தாயியில் பூரணமாய் முடிகிறதற் கேற்றவிதமாய்ச் சேர்த்துக்கொள் என்று சொல்லுகிறார். இதைக் கொண்டு (2/3)x(2/3) என்ற முறையினால் காதுக்குப் பொருத்தமான சுரம் கிடைக்காதென்று பிரத்தியட்சமாய் அறிகிறோம். இது போலவே (3/4)x(3/4) ஆக வரும் ச-ம கொஞ்சம் குறைத்து வருகிறதினால் கொஞ்சம் கொஞ்சம் கூட்டி ஒரு ஸ்தாயியைச் சரியாய் முடிக்கவேண்டும் என்கிறார். ச-ப முறையில் குறைத்துச் சேர்க்காமல்போனால் காதிற்கு அருவருப்பாயிருக்கும் என்பதைப் பற்றி அடியில் வரும் வசனங்களில் பார்ப்போம். The art of tuning the pianoforte by Hermann Smith, Page. 54. “These trials, as they are called, afford at each step a check by which the correctness of the progress may be indicated, or, unfortunately, probably the incorrectness of your first estimates of ”how much” and “how little.” The last is the severest test, as the two notes of which this fifth is formed have been obtained by different series of fifths, and any imperfection in the gradation of the beatings allotted to the previous fifths will mainfest itself here. Hence this fifth, from the frequent harshness and howlings of its beats, has been technically termed the wolf, and strick injunctions are, “Look out for the wolf” Reckon yourself fortunate if no wolf appears.” “இந்த நோட்டுகளைத் திரும்பத் திரும்ப வாசித்துப் பார்த்தால் எவ்வளவு கூட்டவேண்டும் எவ்வளவு குறைக்கவேண்டும் என்பது திட்டமாகுவதுமல்லாமல் நாம் நோட்டுகளைச் சரியான சுரத்தில் வைக்கிறோமோ அல்லவோ என்றும் நமக்கு நிச்சயமாகும். இந்த ஐந்தாவது ஐந்தாவதாய் (ச-ப பொருத்தமாய்) நோட்டுகளை சுரப்படுத்துவது தான் அதிக கஷ்டம். ஏனென்றால் முதலில் இதைக் கொஞ்சம் கூடவைத்துவிடுவோமானால் அது வரவர அதிகப்பட்டுக் கடைசியில் பெருங்கஷ்டத்தை விளைவிக்கும். இந்த ஐந்தாம் பொருத்தம் காதுக்கு
|