பக்கம் எண் :

958
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

கூடியது சுருதிகளை சமபாகமாகப் பிரித்து ஸ்தாபிக்கப்பட்ட ஆரோகணமானது இவ்வித வித்தியாசங்களை உண்டாக்க மாட்டாது. அதுவே சங்கீதம் பாடுகிற வித்வான்கள்முறை வாத்தியங்கள் பலவும் பலவிதமாய் சுருதியேறக்கூடிய வையாயிருந்த போதிலும் தந்திவாத்தியங்களில் நிபுரணரான எல்லாசங்கீத வித்வான்களும் சரியென்று ஒப்புக்கொள்ளும் வழியும் இதுவே. இப்படி சுரங்களுக் கிடையிலுள்ள இடைவெளிகளை சமபாகங்களாகப் பிரிக்கும் முறை ஏற்பட்டபிறகுதான் சங்கீத வாத்தியகானமானது அதிக தேர்ச்சியடைந்திருக்கிறது மல்லாமல் அதுவே எல்லா வாத்தியங்களையும் சுருதிக்கேற்கக் கொண்டுவரும் முறையென்றும் அதினால் உண்டாகும் பிரயோசனங்கள் அனந்தம் என்றும் யாவராலும் ஒப்புக்கொள்ளப்படுகிறது.

சுரங்களை சம ஓசையுள்ளதாகப் பிரிக்கும் முறை அனு சுரங்கள் சேர்த்துப் பாடுவதற்கு உதவியாயிருப்பது போலவே தனித்துப்பாடும் ஒருவனுக்கு மிகுந்த பிரயோசனமாயிருக்கிறது. பல வாத்தியங்கள் ஒன்று சேர்த்துப்பாடுவதற்கும் தந்திவாத்தியங்களில் வாசிப்பதற்கும் இது மிகவும் ஏற்றதாயிருக்கிறது. இதுவே எல்லாத் தேர்ச்சிக்கும் மூலகாரண மாயிருக்கிறதென்று சொல்லுகிறார். இவர் சொல்லும் Equal temperament முறையானது சமீபகாலத்தில் கண்டுபிடிக்கப் பட்டதென்று 837-ம் பக்கத்தில் சொல்லியிருக்கிறோம்.

ஆனால் இம்முறையை இவர்கள் கண்டுபிடிப்பதற்கு 100, 150 வருடங்களுக்குமுன் தஞ்சாவூரில் இருந்து கொண்டுபோன வீணையில் இம்முறைப்படிச் சுருதி சேர்த்திருந்ததாக Capt. Day சொல்லுகிறார் என்று 141-ம் பக்கத்தில் பார்த்திருக்கிறோம். ஆனால் லண்டன் மீயூசியத்தில் வைக்கப்பட்ட தஞ்சாவூர் வீணைக்குப் பல ஆயிரவருடங்களுக்கு முன்னாலேயே சம அளவான ஓசையுடையதாய் நாலு பாலைகளில் வழங்கும் நுட்பமான சுருதிகளையும் கமகமாய் வாசிக்கக் கூடியதாய் பூர்வ தமிழ் மக்கள் கானம்செய்து வந்திருக்கிறார்கள் என்று நாம்அறிகிறோம். இசைத்தமிழில் சுருதி சேர்க்கும் இரகசியம் இவ்வளவுகாலம் மறைந்து இப்பொழுதாவது நமக்குக் கிடைத்ததற்காகச் சந்தோஷப்பட வேண்டியதாயிருக்கிறது.

தமிழ்நாட்டில் ஒன்றாகிய சோழநாட்டிலிருந்து கொண்டுபோய் லண்டன் மியூசியத்தில் வைக்கப்பட்ட வீணையின் சுரஅளவுகள், மேல்நாட்டிற்கு Equal temperament முறையைக் காணுவதற்கு உதவியாயிருந்திருக்குமென்று எண்ணுகிறேன.

The art of tuning the pianoforte by Hermann Smith, Page. 17.

“The two cardinal points of the system are:

1. All octaves shall be tuned perfect.

2. All the fifths shall be a little flatter than perfect.”

“பியானோவின் நோட்டுகளை சரியான சுரத்தில் வைக்கவேண்டியதில் கவனிக்க வேண்டியஇரண்டு முக்கிய குறிப்புகள்.

(1) துவக்கு நோட்டும் அதற்கு எட்டாவது நோட்டும் சரி பொருத்தமுள்ளவையாயிருக்க வேண்டும்.

(2) துவக்கு நோட்டும் அதற்கு ஐந்தாவது நோட்டும் பூரண பொருத்தமில்லாமல் சற்றுக் குறைத்தே வைக்கப்படவேண்டும்.

நாம் ஆரம்ப சுரமாக வைத்துக் கொள்ளும் ஆதார சட்சத்திற்கு மேலுள்ள எட்டாவது சுரமாகிய சட்சம் ஆதார சட்சத்தோடு எவ்விதமும் வித்தியாசமில்லாமல் பொருந்த வேண்டும். ஒரு சிறு பாலகன் பதினாறு வயது பையனோடும் பதினாறு வயது பையன் வயதான ஒரு மனுடனோடும் எப்படி வடிவத்தில் பொருந்தி யிருப்பானோ அதேவிதமாக ஆதார சட்சமும்