பக்கம் எண் :

957
இந்திய சங்கீதத்தைப் பற்றிச் சொல்லும் சில பொதுக் குறிப்புகள்.

நாதம் சம இடைவெளிகளுள்ளதாய் இல்லாமல் Mr. Deval சொல்லுவதுபோல 84, 27, 71, 22, 90, 22 சென்ட்ஸுகளாயிருந்தால் எப்படிப் பன்னிரு சுரங்களும் கிடைக்கும்? பூர்வதமிழ் மக்கள் வழங்கிவந்த இவ்வுத்தமமான முறை பல்லாயிர வருடங்களாக மறைந்துபோக பைதாகோரஸ் சொல்லிய (2/3),(3/4) என்ற முடிவுபெறாக் கணக்கும் ஒருஸ்தாயியில் 22 சுருதிகளென்ற இடறுகல்லும் பல வித்துவான்களுடைய மனதைக் கலங்கவைத்தன.

பூர்வ தமிழ்மக்கள் ஆயப்பாலையான பன்னிரு அரைச் சுரங்களிலேயே கிரகம் மாற்றி இராகங்கள் பல உண்டாக்கிக் கானம் செய்து வந்தார்கள். வட்டப்பாலையில் 24 அலகு அல்லது கால் சுரமுறையாகவும் திரிகோணப்பாலையில் அரைக்கால் சுரமுறையாகவும் சதுரப்பாலையில் வீசம் சுரமுறையாகவும் பிரித்துப் பன்னிரு அரைச் சுரங்களில் ஒன்றோடுசேர்ததுக் கமகமாய் வாசித்து வந்தார்களென்று சொல்லியிருக்கிறோம். பூர்வ தென்னிந்திய கானத்தில் வழங்கிவரும் அரைச்சுர முறையையும் கால்சுர முறையையும் இவ்வளவாவது கவனித்தாரேயென்று நாம் மிகவும் சந்தோஷப்படக்கூடியதாயிருக்கிறது.

தென்னிந்தியாவில் வழங்கிவரும் கானத்தில் கால் சுரங்களைப் பார்க்கிலும் அரைக்கால் வீசம் சுரங்கள் அதிகமாய் வழங்கி வருகின்றனவென்று கண்டிருப்பாரானால் மிகுந்த சந்தோஷமடைந்திருப்பார். அதோடு இப்போது வழங்கும் நுட்பமான சுருதிகளைப் பற்றியும் சொல்லியிருப்பார். ஒருஸ்தாயியில் 22 சுருதிகள் வரவேண்டுமென்ற கூக்குரலுக்குள் இவர் ஒருஸ்தாயியில் 24 சுருதிகள் வருகின்றனவென்று சொன்னது மிகவும் கொண்டாடப்படக் கூடியதே.

இதோடு மேற்றிசை சாஸ்திரிகளில் பியானா சுருதிசேர்க்கும் முறையை மிகத்தெளிவாய் எழுதிய Hermann Smith என்பவருடைய சில குறிப்புகளையும் இங்கே பார்ப்பது மிக நல்லதென்று தோன்றுகிறது. இவர் சுருதி சேர்க்கும் முறையைப்பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அது தற்காலத்தில் யாவராலும் மிக உபயோகமானதென்று கொண்டாடப்படுகிறது. நாளதுவரையும் அனுஷ்டானத்திலிருந்து வருகிறது.

The art of tuning the Pianoforte by Hermann smith P. 75, 76.

“Mr. W. H. B. Woolhouse remarks truly, “It is very misleading to suppose that the necessity of temperament applies only a instrument which have fixed tones. Singers and performers on perfect instruments must all temper their intervals, or they could not keep in tune with each other, or even with themselves; and on arriving at the same notes by different routes would be continually finding a want of agreement. The scale of Equal temperament obviates all such inconveniences, and continues to be universally accepted with unqualified satisfaction by the most eminent vocalists; and equally so by most renowned and accomplished performers on stringed instruments, although these instruments are capable of an infinite variety of intonation. The high development of modern instrumental Music would not have been possible, and could not have been acquired, without the manifold advantages of the tempered intonation by equal semitones, and it is has, in consequence, long become the established basis of tuning.”

Mr. Woolhouse என்பவர் என்னசொல்லுகிறார் என்றால், சுரங்கள் ஸ்தாபகமாயிருக்கப்பட்ட வாத்தியங்களுக்குத்தான் சுரங்களைச் சரிபாகமாய்ப் பிரிக்கும்முறை அவசியம், மற்றவைகளுக்கு அவசியமல்ல என்று நினைப்பது பிசகு. பூரணவாத்தியங்களை வைத்துப் பாடுபவர்களும், வாசிப்பவர்களும் கூட தங்கள் சுரங்கள் சுருதிக்கேற்க அமைத்துக் கொள்ளாவிட்டால், மற்றவர்களோடு சேர்ந்து பாடவாவது தாங்களே சுத்த சுரத்தில் பாடவாவது கூடாது. பல வழிகளின் மூலமாய் ஒரே சுரங்களில் வந்து சேரவேண்டிய அவசியம் இருப்பதால் அடிக்கடி வாசிப்போருக்கும் பாடுவோருக்கும் சுரவித்தியாசங்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கக்