பக்கம் எண் :

956
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

Mr. K. B. Deval, நாரதர் கவனத்திற்கு வந்த ஒழுங்கான இடைவெளிகளுள்ள ஓசையைப் பார்க்கிலும் ச; 1ரி-84, 2ரி-27. 3ரி-71, 4ரி-22, 1ரி-22, 1க-90, 2க-22 என்று ஒழுங்கீனமான சென்ட்ஸ்களை அளவாகக் கொடுக்கிறார். இது என்ன ஆச்சரியம். தொண்ணுறுக்கும் இருப்பத்திரண்டுக்கும் என்ன ஒற்றுமை? எண்பத்து நான்கிற்கும் இருபத்தேழிற்கும் என்ன பொருத்தம்?

பூர்வம் இந்துக்கள் சுருதிகளைச் சம இடைவெளிகளுடையனவாகப் பிரித்தார்களென்று சொல்லுகிறவர் தாம் கொடுத்த கணக்குச் சம இடைவெளிகளுடையனவல்ல வென்று ஏன் தெரிந்து கொள்ளவில்லை? நாரதர் கவனத்திற்கு வந்த ஒன்றையும் கவனித்துச் செய்த ஒன்றையும் இவர் தள்ளலாமா? சங்கீத ரத்னாகரர் ரிஷபத்திற்கும் காந்தாரத்திற்கும் மத்திம தைவத நிஷாதங்களுக்கும் நாலு நாலு சுருதி சொல்ல வில்லையே. (2/3),(3/4) என்ற முறையில் அவர் சுருதி கண்டுபிடிக்கச் சொல்லவில்லை. அவர் சில சுருதிகளைக் கூட்டியும் குறைத்துச் கொள்ளச் சொல்லவுமில்லை.

இப்படிப் பல விதமான ஒழுங்கீனங்களை ஒன்று சேர்த்துச் சங்கீதத்திற்கு உதவி செய்கிறோ மென்று நுல் எழுதிகிறவர்களால் இந்திய சங்கீதம் கெட்டுப் போகாமல் என்ன செய்யும்? எக்காலத்திலும் ஒரு ஸ்தாயியில் 22 சுருதி முறைப்படி கானமிருந்ததேயில்லை. சங்கீத ரத்னாகரர் அபிப்பிராயத்தைக் கர்நாடக சங்கீதத்தின் அனுபோகத்தோடு இணைக்கப் பார்க்கிறவர்களினால் இவ்வாபத்துக் தோன்றியிருக்கிறது. இப்படிப்பட்டவர்களால் பூர்வமான முறைகள் வரவர நுட்பம் இழந்து மாறிப்போகின்றன. அடியில் வரும் வசனங்களால் அவைகளைக் காண்போம்,

A.J. Hipkins.

“Under Captain Day’s guidance we find that in India an ancient quarter-tone system has become in modern times a half tone one, substantially our Equal temperament, but permitting an expressive or ornamental use of smaller intervals than the half-tone according to the players.”

“Captain Day சொல்லுவதைக் கவனித்தால் இந்தியாவில் பழமையாய் வழங்கிவந்த கால் சுரமுறையானது, தற்காலத்தில் அரை சுரமுறையாய் மாறியிருக்கிறது. அதை அநேகமாய் Equal temperament முறை யென்றே சொல்லலாம். ஆனால் அந்த அரைசுர முறையானது வாசிப்பவர்களுடைய மனோதர்மத்திற்கிசைந்தபடி கமகமாய்க் குறைத்தும் கூட்டியும் நுட்பமான சுரங்களாய்ச் சொல்லுவதற்கு இடங் கொடுக்கிறது,”

இந்தியாவில் பழமையால் வழங்கிவந்த கால்சுர முறையானது தற்காலத்தில் அரைச்சுர முறையாய் மாறியிருக்கிறது என்றும் அந்த அரைச்சுர முறையானது பல நுட்பமான சுரங்களைக் கமகமாய்க் குறைத்தும் கூட்டியும் சொல்வதற்கு அனுகூலமாயிருக்கிற தென்றும் அதை Equal temperament முறை என்றே சொல்லலாமென்றும் Capt. Day சொல்லுகிறார் என்று சொல்லுகிறார். இவ்வசனங்களை நாம் கவனிக்கையில் இவர் தென்னிந்திய சங்கீதத்தின் இரகசியத்தை மிகத்தெளிவாக அறிந்திருக்கிறார் என்று பூரணமாய்த் தெரிகிறது.

பூர்வம் ஆயப்பாலையில் வழங்கி வந்த சுரங்கள் பன்னிரண்டே. அப்பன்னிரண்டும் ச-ப வாய் அல்லது இணை, இணையாய், ஏழாவது, ஏழாவது இராசியில் பன்னிருசுரங்களும் பொருந்துகின்றன. இதுபோல் ஐந்தாவது ஐந்தாவது இராசியில் கிளை கிளையாய் ச-ம வாகப் பன்னிரண்டு சுரங்களும் கிடைக்கின்றன இதை Equal temperament என்று எவ்விதத்திலும் ஆக்ஷேபனையின்றி நாம் சொல்லலாமே.