பக்கம் எண் :

111

மகா---ஸ்ரீ N. P. சுப்கிரமணிய ஐயர் அவர்கள் அபிப்பிராயம்.

இந்திய சங்கீத ஸ்தாயியில் வழங்கும் சுருதிகளைப்பற்றி ஆராய்ச்சி செய்த விஷயத்தில் Mr. பண்டிதரவர்கள் அநேக வருஷங்களாகச் செய்த முயற்சியை நேரில் பார்க்கும் சிலாக்கியத்தை நான் அடைந்தவனானதால் இந்தப் புத்தகம் இந்திய சங்கீதத்தை வளரச்செய்யும் விஷயத்திலும் அதற்கு அரிய பல விஷயங்களைச் சேர்க்கும் விஷயத்திலும் அதிய பிரயோசனத்தைத் தருமென்று நிச்சயமான அபிப்பிராயம் கொண்டிருக்கிறேன். சங்கீதத்தை அப்பியாசிக்கும் விஷயத்தில் எல்லாவற்றிற்கும் முக்கியமான மூல ஆதாரம் சுருதிகளைப்பற்றிய ஞானம்தான் என்று தடையில்லாமல் சொல்லலாம், சுருதிகளைப்பற்றிய பிரமாணமே சங்கீதத்தை அனுபவத்துக்கேற்ற ஒரு சாஸ்திரமாக்குகிறது. காதுக்கு இனிமையற்ற சங்கீதத்தை எவ்வளவு மூடிவைத்துப் பிரயோகம் பண்ணினபோதிலும் அது சரியான சங்கீதத்தைக் கெடுத்துவிடாதபடி இந்தச் சுருதிப் பிரமாணமானது எப்போதும் கையிலிருந்து உதவுகிற மூலதனம்போலிருக்கிறது. தற்காலம் சங்கீதத்தை வயிற்றுப் பிழைப்புக்காக உபயோகிக்கிற அநேகர் அதை அனுபோக சாஸ்திரமாக விருத்திக்குக் கொண்டுவருவதற்குவேண்டிய சக்தி யில்லாதவர்களாயிருக்கிறார்கள். ஸ்தாயிக்கு 22 சுருதிகள் உண்டென்ற அபிப்பிராயம் வம்சபரம்பரையாய் அவர்கள் ஒப்புக்கொண்டு வந்த ஒரு கொள்கையாய் அவர்கள் மனதில் மாத்திரம் இருக்கிறதேயல்லாமல் அந்தச் சுருதிகளை வாயினால் சொல்லியாவது வாத்தியங்களில் வாசித்தாவது காட்டமுடியாதவர்களாயிருக்கிறார்கள். இந்தக் கொள்கையைப் பண்டிதரவர்கள் தன்முன் வைத்துக்கொண்டு அதைப்பற்றிப் பலரும் சொல்வதை ஒரு சாஸ்திரியின் நுண்மையுடனும் தகுதியான ஆராய்ச்சியுடனும் எடுத்து கண்டித்திருக்கிறதுமல்லாமல், ஒரு ஸ்தாயியில் 24 சுருதிகளும் மற்றும் நுட்பமான 48, 96 சுருதிகளும் உண்டென்னும் முறையைத் தெளிவாகவும் விஸ்தாரமாகவும் எடுத்து சொல்லி ஸ்தாபிக்கிறார்கள். இவ்வளவு தெளிவாய் இந்தப் புத்தகத்தில் இந்த முறையைச் சொான்னதானது 22 சுருதிக்காரர் மனதில் ஒருவிதக் குழப்பத்தையுண்டுபண்ணினதென்பது எனக்குத் தெரியும். 22 சுருதிகள் என்று சொல்லிக்கொண்டு அதை ருசுப்படுத்தமுடியாமல் விழிப்பதும், அதே சமயத்தில் அந்த முறையைச் சங்கியையோடும் பக்திவிநயத்தோடும் ஆராய்ச்சி செய்தவர்களுடைய முடிவான அபிப்பிராயங்களைக் காரணமில்லாமல் எதிர்ப்பதும் நம்முடைய குலத்தின் பெருமைக்காவது சங்கீதத்தைக் கையாடுபவரின் உண்மைக்காவது அழகல்ல.

புஸ்தகமானது பல விஷயங்களைப்பற்றி ஏராளமான குறிப்புகளுள்ளதானதால் வாசிப்பவருடைய அறிவை விர்த்திசெய்யக்கூடியது. அதிலுள்ள சரித்திர விஷயங்களும் அட்டவணைகளும் உபமானங்களும் வாசிக்க வாசிக்க மனதை வசப்படுத்தகூடியவை, ஆதித்தமிழருடைய நாகரீகம், சங்கீத விஷயத்தில் அவர்கள் அடைந்திருந்த ஆச்சரிய விதமான பாண்டித்தியம் முதலிய விஷயங்கள் வாசிப்பவருக்குத் தெளிவாய்த் தெரியும். புஸ்தகத்தைப்பற்றிய இன்னொரு முக்கியமான புகழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால், அவர்கள் சொல்லும் 22 சுருதிகள் முறை கட்டாயப்படுத்தியாவது மற்ற சுருதிகளை வேறு விதமான ஒழுங்குப்படுத்தியாவது உண்டாக்கப்பட்டதாயிராமல் ஆதித்தமிழ்நூல்களில் செய்யப்பட்ட 7, 12, 24, 48, 96 சுருதிகள் முறையிலிருந்து பிறந்ததென்று அறியவேண்டும். இம்முறை நமது முன்னோர்களின் இரத்தத்தோடு ஆயிரமாயிரம் வருஷங்களாகக் கலந்து வந்திருக்கிறது.

போனவருஷம் பரோடாவில் நடந்த கான்பரென்சில் பண்டிதரவர்களின் 24 சுருதி முறை பரீக்ஷை செய்யப்பட்டதுபோல் வேறெந்த சமயத்திலும் செய்யப்படவில்லை. அச்சமயம் அம்முறை விளக்கிக்காட்டப் பட்டபோது அங்கு கூடியிருந்த பிரபல வித்வான்கள் யாவராலும் அது சரியென்று அங்கீகரிக்கப்பட்டதுமல்லாமல் பண்டிதரவர்கள் கல்வி வாய்ந்த குமாரத்திகளால் அம்முறை ருசுப்படுத்திக்காட்டப்பட்டபோது அவர்கள் எல்லாராலும் புகழப்பட்டார்கள். அவ்விதமாகவே கைக்வார் மகாராஜாவின் வேண்டுகோளின் பேரில் அவர்கள் முன்னிலையிலும் மகாராணியவர்கள் முன்னிலையிலும் அரண்மனையில் அம்முறை ருசுப்படுத்தப்பட்டபோதும் அவர்கள் பெற்ற கீர்த்திப் பிரதாபம் சொல்லமுடியாது. இரண்டு சமயங்களிலும் மற்றவர்களோடுகூட நானும் ஆசராயிருக்கும் சிலாக்கியத்தைப் பெற்றேன். தஞ்சை சங்கீத மகாஜன சங்கத்தின் 7-வது கான்பரென்சிலும் இம்முறையும் அதன் ருசுவும் செய்து காட்டப்பட்டன. அதோடு சுரங்களின் கணக்குகளும் மற்றும் நுட்பமான விஷயங்களும் அந்த விஷயத்தைப் பலவிதமாயும் நோக்கி ஆராய்ந்து அபிப்பிராயம் சொல்லக்கூடிய