வித்வான்களால் நுட்பமாய்ப் பரீக்ஷிக்கப்பட்டது. இந்தப் புஸ்தகத்தின் பின் பக்கங்களில் சொல்லப் பட்டிருக்கிறபடி அம்முறை சாஸ்திர விஷயமாய்ச் சரியென்றும் அனுபவத்திற்கும் அது ஒத்ததாகவே இருக்கிறதென்றும் அவர்கள் எல்லாரும் நற்சாட்சி கொடுத்திருக்கிறார்கள். சந்தேகக்காரரும் பழையதே சரியென்று சாதிக்கும் கோழைகளும் இப்புத்தகத்தைப்பற்றித் திருப்திப்படாமல் அதினுடைய நல்ல வேலையைக் கெடுக்கும்படி பிரயாசப்படலாம். அதுவும் சில நாளைக்குத்தான். ஆனால் நிஷ்களங்க மனதுடனும் உண்மையை அறிய வேண்டும் என்ற அவாவுடனும் அதைப் படிப்பவருக்குச் சாஸ்திரத்தின் மறைபொருளான காரியங்களெல்லாம் எளிதில் விளங்கும். பண்டிதரவர்கள் அநேக வருஷங்களாய் விஸ்தாரமான முயற்சிசெய்துவந்ததின் பலனாக இந்த முறையை ஸ்தாபிக்கிறார்கள். அப்பேர்பட்ட நிஷ்களங்க மனதுள்ளவர்கள் தான் ஜாக்கிரதையான மனதுடன் இவர்கள் செய்த வேலையைப்போலச் செய்யக்கூடியவர்கள். (ஒப்பம்) N. P. சுப்பிரமணியஐயர். ************* சென்னை எப்பா ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிதர் மகா- - -ஸ்ரீ M. தேவப்பிரசாதம் பிள்ளை அவர்கள் கொடுத்த சாத்துகவி. | 1. | கடல்சூழும் நிலவுலகி லுளவுயிர்கள் யாவினுமா கதித்த தான உடல்சூழுங் கறையடியை நடம்புரி மிக்கமகிழ் வூட்டு விக்கும் அடல்சூழுங் கொடும்புலியை வயவரியைச் சாதுகுணத் தமர வைக்கும் மிடல்சூழு மிவுளியினைச் செருக்களத்தே யுற்சாக மேவச் செய்யும். | | 2. | இரையுண்ண நீரருந்த வெண்ணாது நெடுங்கழுத்தி ரவணந் தன்னுள் கரையிலாக் களிப்பெய்திக் களைப்பினையுங் கருதாது காலாறாது விரைவாகப் பாலைவனங் கடந்திடவே செலுத்திடுமிம் மெய்மை தேரில் தரைமீது தரைமீது சங்கீதந் தனக்கிணையா வேறொன்றைச் சாற்ற லாமே. | | 3. | வண்டிகளை யோட்டுகின்றோர் பாடுகின்ற தெம்பாங்கும் மற்றுங் கேட்டுச் சண்டிநிற மாடுகளு மிறுமாந்து கடும்பாரந் தாவி யீர்த்துக் கொண்டிவரு மானிரைகள் கோபால ரூதுபுல்லாங் குழலி னோசைக் கண்டவரும் பால்கறக்கு முட்டவந்த சுதைபாடற் கானந் தித்தே. | | 4. | வனவேடர் பாண்கேட்டு மனமுருகி யசையாது மான்க ணிற்கும் சுனகனுநல் லிசைகேட்கிற் குரைப்பின்றி யமர்ந்திருந்து சுகித்து போகும் புனலிற்செல் வங்கமதிற் குழலொலியைச் செவியுற்றுப் புணரி நாய்கள் இனமெல்லாந் திரண்டொன்றாய்த் தொடர்ந்துவருந் தொலைதூர மெக்க ளித்தே | | 5. | கானரச மனுபவித்துக் கச்சகமுந் தலையசைத்துக் களியைக் காட்டும் வானமதிற் சஞ்சரிக்குஞ் சாதகமுங் கின்னரமு மற்றும்புள்ளும் ஞானமுட னிசைகேட்டங் கேழுறுவ தன்றித்தந் நாவாற் பாடி மோனமிகு முனிவரையு மேனையவ ரையுமின்பின் மூழ்த்து மாதோ |
|