| 6. | மாதவுமென் பருவத்தே மதியநிறைந் தொளிகால மலைமேற் கானில் பாதவங்கள் செறிந்துள்ள பணையோரம் வீணையினற் பணைவா சிக்கில் ஆதரமோ டவ்விசைகேட் டானந்தித் தந்தரத்தே யசுண மாக்கள் போதமுஞ்சோர்ந் தசைவற்று நிற்குமெனி லிசைப்பெருமை புகல்வார் யாரே. |
| 7. | தண்டலையிற் கம்பலையிற் றாருவினிற் செடிகொடியிற் றடத்திற் கானில் உண்டுபடு மலர்மதுவை யுண்டுமிக வுளமதர்த்தே யுழைக டோறும் வண்டுகள்செவ் வழிமுரலும் வாவியிற்றா மரைவளைய மச்ச மார்ந்து கொண்டெமது செவிக்கமுதஞ் சொரிவதெனக் காதம்பங் கூவிப் பாடும். |
| 8. | மண்ணிலத் தற்பமா மசகந் தானுமே பண்ணுறப் பாடியே பறந்து லாவிடும் தண்ணிய வோசையைச் சார்ந்து கேட்டிடும் எண்ணிலிவ் விசைவலை யாவை தாம்படா. |
| 9. | இல்லிடந் தோறுமற் றெங்கு முள்ளதாம் பல்லியு மிசைமிகப் பரிந்து கேட்குமால் நல்லிய லோசையை நயந்து போந்துபின் மெல்லிய நூல்வலை மீளும் லூதையே. |
| 10. | குத்திவா ழுயிர்களுட் கொடிய நாகமும் மத்தமுற் றதுவென மகடி வாயெழு நத்துபுன் னாகவ ராளி கேட்டலும் உததியார் பைவிரித் துவப்பொ டாடுமே. |
| 11. | தொட்டிலிற் கிடந்தழத் துவக்கு மோர்சிசு கிட்டிவந் தம்மனை கிளத்து தால்செவிப் பட்டிடப் பொருமல்போய்ப் பருமி தங்கொளும் இட்டளந் தீர்த்திசை யின்பு மீயுமே. |
| 12. | அவ்விய நீக்கியே யருள ளித்திடும் செவ்வையில் சோம்பினைத் தீர்த்துத் தாடரும் கவ்வைசேர் மூர்க்கமுங் கழித்துச் சாந்தமே ஒவ்வுறச் செய்திடு முயர்சங் கீதமே. |
| 13. | கவலைக டீர்த்துளக் களிப்பை யீந்திடும் புவனியை யுவணைபோற் பொலியச் செய்திடும் அவலம தொழித்துமிக் காற்ற னல்கிடும் துவல்கொலும் விடத்தையுந் தொலைக்குங் கீதமே. |
| 14. | நள்ளலர் தம்மையு நண்ப ராக்கிடும் உள்ளபல் லுயிர்கடம் முள்ள மீர்த்திடும் அள்ளையைக் கூளியை யடக்கிக் கட்டிடும் எள்ளரும் வலியுடைத் தினிய கீதமே. |