பக்கம் எண் :

119

சோழதேசத்தில் விளங்கும் பஞ்சநதபுரத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் கவர்ண்மெண்டு ஸமஸ்கிருத பாடசாலை முக்கிய உபாத்தியாயரும்

 ராதாமங்கல கிராம வாசியுமான கானகவி பிரம்மஸ்ரீ
நாராயண சாஸ்திரிகள் அபிப்பிராயம்.
-----------

1. உலகத்தைக்காப்பாற்ற வேண்டிய அபிலாஷையால் ஏற்படுத்தப்பட்ட அழகான தோட்டங்களாலும் அமிருதம்போல மதுரமான ஒளஷதங்களாலும் ராவ்ஸாஹேப் ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் ஜனங்களுக்கு உபகாரம் செய்து தன்பொருள் உதவியால் தமிழ்ப்பாஷையில் எழுதி தன் அபிப்பிராயத்தை வெளியிட்டு தன் கிரந்தத்தில் கீத சாஸ்திரத்தை பரவச்செய்து அதற்கு சோபை உண்டாக்கினார்.

2. ஸங்கீத ரத்னாகர கிரந்தத்தை எழுதிய வரின் இஷ்டமான சுருதி கிரமத்தை சங்கீத வித்வான்கள் இக்காலத்தில் பாட சக்தியற்றவர்கள். ஆகையால் பண்டிதர் அவர்கள் யத்னம் செய்தது ஜய மடைந்ததென்பது என் அபிப்பிராயம்.

3. செம்மையாக விசாரணைசெய்து பண்டிதரால் விஸ்தாரமாக எழுதப்பட்டிருக்கும் கிரந்தத்தைப் பற்றி விஸ்தாரமாக எழுத முடியாததால் ஸங்கிரஹமாக எழுதுகிறேன்.

4. தமிழ்பாஷையில் 3 சங்கங்களில் ஏற்பட்ட வாதக்கலக்த்துடன் கூடிய ஸங்கீத சம்பிரதாயம் வெகுகாலமாக இருப்பதாக செம்மையாக எடுத்துக் காட்டினார்.

5. தேசாந்தரங்களில் ஸங்கீத பிரசுரம் நிறைந்திருக்கும் காலத்தில் இந்த தேசத்தில் ஸங்கீத ஸம்பிரதாயத்தை ஏற்படுத்தி, எடுத்துச் சொல்பவர் இல்லை.