பக்கம் எண் :

120

6. தமிழ்ப் பாஷையில் வெகுகாலமாக ஏற்பட்ட சங்கதிதான் இதரபாஷைகளில் வெளிப்படுத்தப் பட்டதென்று தன் கிரந்தத்தில் விஸ்தாரமாக எடுத்துக் காண்பிக்கிறார்.

7. தமிழ் வித்வான்களால் அப்பியஸிக்கப்பட்ட சங்கீத சாஸ்திர பிரஸ்தாப கோலாஹலத்தால் வேறு அபிப்பிராயம் கொள்பவர்களின் அபிப்பிராயம் கண்டிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

8. ரத்னாகர கிரந்தத்தில் சொல்லி இருக்கும் உண்மையை கணிதமூலமாக பிரசுரம் செய்தல் சங்கீத சாஸ்திரத்தில் ஆசையுள்ளவர்களைச் சந்தோஷப்படுத்தி வைக்கிறது.

9. தமிழ் வித்வான்களுக்கு பழக்கமாகிய 96 சுருதியை பரிசீலனை செய்து அதைப் பாதிபாதியாக வகுத்து சுருதி கிடைக்கிறதென்று கணக்கினால் காட்டப்படுகிறது.

10. காயத்ரீ மந்திரத்தின் அக்ஷரங்களின் எண்ணிக்கையில் 2 அக்ஷரங்களை குறைத்து 22 சுருதி கிரமம் சாரங்கதேவர் ஏற்படுத்தினார்.

11. சுருதிகள் 96 ஆகவும் 48 ஆகவும் 24 ஆகவும் 12 ஆகவும் பிரிக்கப்படுகிறது.

12. இந்த கர்னாடக கீதம் காயகர்களால் பாடப்படுகிறதென்பது பிரசித்தம். எண்ணிக்கையில்பேதம் ஏற்படுவது ராகம் பாடுவதில் உண்டாகும் பேதம்.

13. மேற்கூறியகைவளில் ராவ்சாகேபு என்று பட்டபெயர் அடைந்த ஆபிரகாம் பண்டிதர் தன்னுடைய கருணாமிருதஸாகரம் என்கிற கிரந்தத்தில் விஸ்தாரமாக எடுத்துக் காட்டியிருக்கிறார்.

14. வைத்தியம், யோகம், ஆயுர்வேதம், ஜோதிடசாஸ்திரம், வேதாந்த சாஸ்திரம் சம்பந்தம் இருப்பதாக அவர் சுருதிகணக்கு எடுத்ததில் காட்டப்பட்டிருப்பதாக நான் அறிந்து கொண்டேன்.

15. வீணை ரூபம் அதின் சுரம், சுருதி, சப்தம் முதலியவைகள் உண்டாவது மனுஷியனுடைய கழுத்து, சுர சுவாஸம் கலை முதலியவைகளை ஒத்து செய்யப்பட்டது.

16. மேற்கு தேசத்திய சங்கீத வித்வான்கள் சொல்லும் பரிமாணத்திற்குத் தக்கப்படி த்வனிசாம்யம் முன்காலத்திலேயே தமிழ் வித்வான்களால் அறியப்பட்டதென்று பல விதமாக இந்தக் கிரந்தத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.

17. மற்றவர்கள் பாடும் ஸ ம ப நி என்கிற 4 ஸ்வரங்களிலுண்டாகும் 4 வீணைகளில் ஸ க ப நி என்கிற ஸ்வரங்களிலிருந்து 4 ஜாதி உண்டாகிறது. 18

19. ரத்னாகரம் செய்தவரும், பரதமுனியும் முன் இருந்த திராவிடர்களும் இவ்விதமான ஸங்கீத ரஹஸ்யத்தை சொல்லவில்லை என்று காட்டப்பட்டது.

20. ஒருஸ்தாயில் சுருதி 22 என்பது ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லை என்றும் சுருதி 24 என்பது சொல்லப்பட்டிருக்கிறது என்றும் சொல்லப்பட்டது.

21. சுருதி 22 என்று சொல்பவர்களின் கொள்கையை தடுப்பதற்கு இவ்வளவு பிரயாஸம் எடுத்துக் கொண்டு தன் அபிப்பிராயம் எழுதப்பட்டது.

22. ‘சுருதிஸ்வரவிவேகம்’ சிரமத்தை எடுத்துக்கொண்டு இதுவரையில் ஒருவராலும் அறியப்படவில்லை. இந்த கிரந்தத்தில் திராவிட பிரமாணத்தால் காட்டப்படுகிறது.

23. தமிழ் சொற்கள் மிருகபக்ஷி, த்வனிக்கு சமானமான விந்யாசத்துடன் கூடியவைகளாக வெகு காலமாயிருக்கிறது. பாஷையின் உற்பத்திக்கு காரணம் பிராகிருத மூலங்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

24. மற்றவர்களாலறியக்கூடாத கீதி, சுருதி ஸ்வரஸ்தானங்களை சொன்ன காரணத்தினால் திராவிடர்கள் முன்னமே அறிந்தவர்களென்றும் கௌரவமடைந்தவர்களென்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

25. பரோடா ராஜாவினால் ஏற்படுத்தப்பட்டதும் சங்கீத வித்வான்கள் சமூகமும் அடங்கியதுமான சபையில் தன் பெண்கள் பாடி ராஜா மந்திரி முதலியவர்கள் சந்தோஷமடைந்ததைக் கொண்டே இவர் அபிப்பிராயம் ஒப்புக்கொள்ளப்பட்டது.

26. ஆபிரகாம் பண்டிதர் சிரமப்பட்டு எழுதிய கிரந்தத்தில் சூக்ஷமமாக அறியக்கூடிய விஷயங்களை விசாரணை செய்திருக்கிறார்.

27. ஜனங்களுக்கு கொடுப்பதற்காகவே தனார்ஜனம் செய்த இப் பிரபு மேன்மையாக இருக்கக் கடவர். இவ்விதம் நாராயணகவி தன் அபிப்பிராயத்தை ஒளிக்காமல் வெளியிட்டார்.