பக்கம் எண் :

121

எட்டையாபுரம் சமஸ்தானம் ஸமஸ்கிருத வித்வான் பிரம்மஸ்ரீ
குருநாத சாஸ்திரிகள் அபிப்பிராயம்.

1. முன்காலத்தில் மஹாவிஷ்ணு சமுத்திரத்தைக்கடைந்து அமிருதம் எடுத்ததுபோல சங்கீத சாஸ்திர சமுத்திரத்திலிருந்து ராவ்சாஹேப் ஆபிரகாம் பண்டிதர் கருணாமிருதம் என்கிற சுருதி விஷய கிரந்தமான அமிருதத்தை அடைந்தார்.

2. எவ்விதம் முன்காலத்தில் சமுத்திரத்திலிருந்து எடுக்கப்பட்ட அமிருதம் தேவர்களுக்கு பிரீதியை உண்டாக்கியதோ அவ்விதமாக சங்கீத ஸாஹித்யம் அறிந்தவர்களும் கானம் செய்பவர்களுமான வித்வான்களுக்கு இந்த கர்ணாமிருத கிரந்தம் பிரீதியை உண்டாக்க வேண்டும்.

3. பாடுமந்திரத்தை உச்சாரணம் செய்பவர்களை ரக்ஷிப்பதால் காயத்ரீ என்கிற பெயர் ஏற்பட்டது. அந்த காயத்ரீ மந்திரத்தில் இருக்கும் 24 அக்ஷரங்களும் 24 சுருதிஸ்தானங்களாயிருக்கின்றன.

4. ஜபம் செய்வதில் மந்திரத்தில் உள்ள அக்ஷரத்தை விடுவது தோஷமாகும். கானம் செய்வதில் சுருதியை குறைப்பது தோஷமாகும். அந்த சுருதியின் எண்ணிக்கை 24 சுருதிஸ்தானங்களாலும் 24 என்பதில் ஸந்தேகமில்லை.

5. ஆகையால் உத்தமவித்வான்கள் எல்லா பிரயத்னங்கள் செய்தும் 24 எண்ணிக்கையுள்ள சுருதிஸ் தானங்களை அறிந்துகொள்ள வேண்டும்.

(தஞ்சாவூர் வக்கீல் மகா---ஸ்ரீ பி. வி. கிருஷ்ணசாமி ஐயரவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.)