9. தமிழ்ப்பாஷையே எல்லாப்பாஷைகளுக்கும் தாய்ப்பாஷையா யிருந்திருக்க வேண்டுமென்பதற்கு யாவரும் மறுக்கக்கூடாத முக்கிய ஆதாரம் பிரணவமந்திரம். ஓம் என்ற பிரணவ அட்சரம் பரமசிவத்தையே குறிக்குமென்றும், அதைத் தியானம் பண்ணுகிறவன் சிவத்தையே அடைகிறானென்றும், சிவமாகவே விளங்குகிறானென்றும், அவ்வெழுத்தே மூலமந்திரமாமென்றும், அம்மந்திரத்தைக் கொண்டே தாங்கள் ஆரம்பிக்கும் எதையும் தொடங்க இடையூறின்றி முடியுமென்றும் அறிந்த தமிழ்மக்கள் அதையே தங்களுக்கு ஜெபமாகக் காலைமாலைகளில் செய்து வந்தார்களென்பது நாம் யாவரும் அறிந்த விஷயமே. பிராணாயாமம் செய்து சுவாசிக்கும் சுவாசத்தின் கால அளவை விருத்தி செய்து அதினால் ஆயுள் நீடித்திருக்கும் வல்லமைபெற்று "வாசி வாவென்று வாசியில் ஊடாடி வாசியை உள்ளே வைத்துநீ பூஜித்தால் வாசியும் ஈசனும் மருவி ஒன்றாகும் வாசியைப் போல்சித்தி மற்றொன்றும் இல்லையே." என்ற வாக்கியத்தின்படி தெய்வப் பிரசன்னமும் பெற்று விளங்கினார்கள். தாங்கள் யோக சாதனை செய்கையில் ஓம் என்ற பிரணவ அட்சரத்தையே உச்சரித்து மாத்திரைகளின் கணக்கை நிச்சயப்படுத்திக் கொண்டு வந்தார்கள். இவ்வெழுத்தினால் குறிக்கப்படும் சிவத்தினின்று ஈசானம், தற்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்ற பஞ்சசக்திகள் உண்டாகிறதாகவும் அச்சக்திகளின் செயல்களைப் பெறுவதற்கு ந ம சி வ ய என்ற ஐந்து அட்சரங்களை அதாவது பஞ்சாட்சரத்தை நடுவணை பிடித்துமாறி ஐந்து மந்திரங்களாக்கி ந ம சி வ ய, சி வ ய ந ம, ய ந ம சி வ, ம சி வ ய ந, வ ய ந ம சி, என்ற ஐந்து மந்திரங்களிலிருந்தும் 125 என்னும் அநேக மந்திரங்களுண்டாக்கி, அவைகள் ஒவ்வொன்றிற்கும் ஓம் என்ற பிரணவ மந்திரத்தைச் சேர்த்து ஜெபித்து, அவ்வொவ்வொன்றிற்குமுரிய செயல்களையும் பெறுவார்களென்று விரிவாகச் சொல்லியும், மற்றவர்களுக்கு உபதேசித்தும், தாங்கள் சாதித்தும், தம்பனம், மோகனம், வசியம், மாரணம், உச்சாடனம், ஆகருடணம், வித்துவேட்னம், பேதனம் என்னும் அஷ்டகர்மசித் திகளையும் பெற்றுச் சிறந்து விளங்கினார்கள். இன்னும் இவ்வைந்து எழுத்துக்கள் நிறைந்த சிதம் பரச் சக்கரத்தைச் ஜெபிக்கவும் கோயில்களில் ஸ்தாபிக்கவும் வேண்டிய விதிகளும் முறைகளும் விரிவாய்ச் சொல்லியிருக்கிறார்கள். இவ்வைந்து எழுத்துக்களும் பிரணவத்தின் ஐந்து சக்திகளென்றும், இவ்வைந்து சக்திகளும் பிரணவத்தி லடக்கமென்றும், பிரணவமே பிரமமென்றும், பிரமமே பேரண்டம் சிற்றண்டமென்றும், பிரணவமே பிராணனென்றும், பிரணவமே அகார, உகார, மகாரமென்ற அட்சரங்களின் சேர்க்கையான ஓம் என்றும், சத்து, சித்து, ஆனந்தமென்றும், சிருஷ்டி திதி லயமென்னும் முத்தொழில்களாகி உலகம் நடத்தப்பட்டு வருகிறதென்றும், எட்டும் இரண்டும் பத்துமான அளவுடன் விளங்கிக் கொண்டிருக்கிறதென்றும், அகார, உகார, மகாரமான ரவி, மதி, அக்கினி என்று சொல்லப்படும் கலைகளாய் உயிர்கள் தோறும் பிராணனாய் விளங்குகிறதென்றும், இப்பிராணனே ஜீவனென்றும், ஆணவம், காமம், மாயை என்ற மும்மலமற்ற ஜீவனே சிவனென்றும், ஜீவச்செயல் ஒழிந்து சிவச்செயலில் நிற்பதே தவசென்றும், யோகமென்றும், மோட்சமென்றும் கண்டறிந்தார்கள். இதையே பல நூலாக
|